நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!

காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் மானியக் கோரிக்கை மீது முதல்வர் விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்...

CM Vijay

முதல்வர் விஜய் - TN assembly

Published On :

2026 ஆம் ஆண்டில் 10,000 காவலர்களில் 5,000 பெண் காவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்தார்.

காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் மானியக் கோரிக்கை மீது பேரவையில் முதல்வர் விஜய் பேசினார். அப்போது காவல்துறை மானியக் கோரிக்கையில் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

"அடுத்த 5 ஆண்டுகளில் 29,108 கூடுதல் காவல் பணியிடங்கள் உருவாக்கப்படும்.

2026 ஆம் ஆண்டில் 10,000 காவலர்களில் 5,000 பெண் காவலர்கள் நியமிக்கப்படுவார்கள்.

போதைப்பொருள் ஒழிப்பைத் தடுக்கும் நோக்கில் கிராம் ஒன்றுக்கு ரூ. 10 லட்சம் வீதம் 50 கிராமங்களுக்கு வழங்கப்படும்.

காவல்துறையை நவீனமயமாக்க ரூ. 212 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மாநில காவல் நிலையங்களில் சில்லறை செலவினம் உயர்த்தி வழங்கப்படும்.

பணிக்காலத்தில் துணிச்சலுடன் போராடி இறக்கும் காவலருக்கு ரூ. 1 கோடி வழங்கப்படும்.

பணிக்காலத்தில் இறக்கும் காவலர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் கருணைத் தொகை ரூ. 20 லட்சத்தில் இருந்து ரூ. 30 லட்சமாக உயர்த்தப்படும்.

வண்டலூர் போலீஸ் அகாதெமியில் விளையாட்டு வசதிகள் ரூ. 23 கோடி செலவில் அமைக்கப்படும்.

சேலம், விழுப்புரம் வட்டார தடய அறிவியல் ஆய்வகத்தில் ரூ. 14 கோடியில் மரபணு ஆய்வு சோதனை மையங்கள் நிறுவப்படும்.

காவல்துறையில் ரூ. 200 கோடி புதிய வாகனங்கள் வாங்கப்படும்" என்றார்.

Summary

5,000 female constables out of 10,000: CM Vijay announced the police recruitment details

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.