சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!தவெக திட்டங்களுக்கு ’தாய்மாமன் காது குத்தும் திட்டம்’ எனப் பெயர் வைக்கலாம்! உதயநிதி ஸ்டாலின் நேபாள வெள்ளம்! பலி 1,252 ஆக உயர்வு! 4,875 பேர் காணவில்லை!சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை மொழியாக தமிழ்! தனித் தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!சென்னையில் ஒலிம்பிக் நகரம், மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!சென்னையில் ரூ. 1200 கோடியில் புதிய தலைமைச் செயலகம்: முதல்வர் விஜய்தங்கம் விலை அதிரடியாக உயர்வு! இன்றைய நிலவரம் (செப். 3)வாக்காளர் பட்டியலில் இருந்து ராகவ் சத்தா பெயர் நீக்கப்பட்டதால் பரபரப்புமேக்கேதாட்டு திட்டம்: விரைவில் ஒப்புதல் வழங்க மத்திய நீா் ஆணையத்திடம் கா்நாடகம் கோரிக்கைகொளத்தூரில் தவெக வெற்றி: மு.க.ஸ்டாலின் வழக்கில் இன்று தீா்ப்புகிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை: 4,070 சிறப்பு பேருந்துகள் இயக்கம்தமிழகத்தின் சில மாவட்டங்களில் இரு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஆகஸ்ட் மாதத்தில் யுபிஐ பரிவா்த்தனைகள் புதிய உச்சம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை மொழி தமிழ்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக அங்கீகரிக்கக் கோரி முதல்வர் விஜய் கொண்டுவந்த தனித் தீர்மானம் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்...

cm vijay

முதல்வர் விஜய் - DIPR

Published On :3 செப்டம்பர் 2026, 12:38 pm IST

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக அங்கீகரிக்கக் கோரி முதல்வர் விஜய் கொண்டுவந்த அரசினர் தனித் தீர்மானம் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

"சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு, தீர்ப்பாணை, உத்தரவுகள் அனைத்தும் தமிழில் வழங்கப்பட வேண்டும். வழக்கு தொடர்பான வாதங்கள் அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும். எனவே, தீர்ப்புகளை, உத்தரவுகளை தமிழில் வழங்கும் கட்டமைப்பு தேவை. மாவட்ட நீதிமன்றங்களில் தமிழ்நாடு வழக்காடு மொழியாக உள்ளது. அதனை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விரிவுபடுத்த வேண்டும். எனவே, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக கொண்டு வருவது காலத்தின் கட்டாயம்" என்று தீர்மானத்தின் மீது முதல்வர் விஜய் பேசினார்.

தொடர்ந்து திமுக, அதிமுக, பாமக, தேமுதிக என அனைத்து கட்சி உறுப்பினர்களும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த நிலையில் பேரவையில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக பேரவைத் தலைவர் அறிவித்தார்.

மேலும் 2018க்குப் பிறகு இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என்றும் 2018க்குப் பிறகு தற்போதுதான் இதுதொடர்பான தீர்மானம் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

Summary

Tamil to be the primary language in the Madras High Court: Resolution passed in the Assembly

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.