சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை மொழியாக தமிழ்! தனித் தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!சென்னையில் ஒலிம்பிக் நகரம், மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!சென்னையில் ரூ. 1200 கோடியில் புதிய தலைமைச் செயலகம்: முதல்வர் விஜய்தங்கம் விலை அதிரடியாக உயர்வு! இன்றைய நிலவரம் (செப். 3)வாக்காளர் பட்டியலில் இருந்து ராகவ் சத்தா பெயர் நீக்கப்பட்டதால் பரபரப்புமேக்கேதாட்டு திட்டம்: விரைவில் ஒப்புதல் வழங்க மத்திய நீா் ஆணையத்திடம் கா்நாடகம் கோரிக்கைகொளத்தூரில் தவெக வெற்றி: மு.க.ஸ்டாலின் வழக்கில் இன்று தீா்ப்புகிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை: 4,070 சிறப்பு பேருந்துகள் இயக்கம்தமிழகத்தின் சில மாவட்டங்களில் இரு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஆகஸ்ட் மாதத்தில் யுபிஐ பரிவா்த்தனைகள் புதிய உச்சம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை மொழியாக தமிழ்! தனித் தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மற்றும் அலுவல் மொழியாக அங்கீகரிக்கக் கோரி தனித் தீர்மானத்தை பேரவையில் முதல்வர் விஜய் முன்மொழிந்தது பற்றி...

Tamil as the primary language in the Madras High Court: CM Vijay moved a special resolution

முதல்வர் விஜய் - TN assembly

Published On :3 செப்டம்பர் 2026, 11:11 am IST

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மற்றும் அலுவல் மொழியாக அங்கீகரிக்கக் கோரி அரசினர் தனித் தீர்மானத்தை பேரவையில் முதல்வர் விஜய் முன்மொழிந்தார்.

தீர்மானத்தின் மீது முதல்வர் விஜய் பேசுகையில்,

"தமிழ் என்பது மொழி மட்டுமல்ல, உயிரோடும் உணர்வோடும் கலந்தது என்றே கருதுகிறோம்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு, தீர்ப்பாணை, உத்தரவுகள் அனைத்தும் தமிழில் வழங்கப்பட வேண்டும். வழக்கு தொடர்பான வாதங்கள் தமிழில் இருந்தால் மக்களுக்கு எளிதாக புரியும். மனுக்கள், வாதங்களுக்கு உரிய நடைமுறை வேண்டும். எனவே, தீர்ப்புகளை, உத்தரவுகளை தமிழில் வழங்கும் கட்டமைப்பு தேவை.

நீதிமன்ற வழக்கறிஞர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் தமிழில் மொழிபெயர்க்க சட்டத் தமிழ் பயிற்சி தேவை.

மாவட்ட நீதிமன்றங்களில் தமிழ்நாடு வழக்காடு மொழியாக உள்ளது. அதனை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விரிவுபடுத்த வேண்டும். எனவே, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக கொண்டு வருவது காலத்தின் கட்டாயம். சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆங்கிலத்திற்கு இணையான வாய்ப்பைத் தமிழ் மொழிக்கு வழங்க வேண்டும்.

இந்த கோரிக்கை எந்த மொழிக்கும் எதிரானது அல்ல. மத்திய அரசும் குடியரசுத்தலைவரும் இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்" என்று பேசினார்.

Summary

Tamil as the primary language in the Madras High Court: CM Vijay moved a special resolution

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.