
நார்வே மன்னர் ஹரால்டின் இறுதிச் சடங்கு! ஏராளமான உலகத் தலைவர்கள் பங்கேற்பு!
மறைந்த நார்வே மன்னர் மூன்றாம் ஹரால்டுக்கு இன்று இறுதிச் சடங்கு நடைபெற்றது குறித்து...

மறைந்த நார்வே மன்னர் மூன்றாம் ஹரால்டுக்கு இன்று இறுதிச் சடங்கு - ஏபி
மறைந்த நார்வே மன்னர் மூன்றாம் மன்னர் ஹரால்டின் இறுதிச் சடங்கில் ஏராளமான நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
நார்வே நாட்டின் மன்னராக 35 ஆண்டுகளுக்கும் மேலாகப் பதவி வகித்து வந்த 89 வயதான மூன்றாம் ஹரால்ட் கடந்த ஆக. 28 ஆம் தேதி உடல் நலக் குறைவால் காலமானார். ஹரால்ட்டின் மறைவைத் தொடர்ந்து அவரது மகன் எட்டாம் ஹாகோன் நார்வேவின் புதிய மன்னராகப் பதவியேற்றுக்கொண்டார்.
இந்த நிலையில், மன்னர் மூன்றாம் ஹரால்டுக்கு இன்று (செப். 9) தலைநகர் ஆஸ்லோவில் இறுதிச் சடங்கு நடைபெற்றுள்ளது. ஆஸ்லோ நகரம் முழுவதும் 21 குண்டுகள் முழங்க மன்னர் ஹரால்டின் உடல் அடங்கிய சவப்பெட்டி அரசு மாளிகையில் இருந்து ஆஸ்லோ தேவாலயத்துக்கு ஊர்வலமாகக் கொண்டுச் செல்லப்பட்டது.
மன்னர் ஹரால்டின் இறுதி ஊர்வலத்தை நேரில் காண ஆயிரக்கணக்கான நார்வே மக்கள் ஆஸ்லோவின் தெருக்களில் திரண்டு அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இறுதி ஊர்வலத்தில் மன்னர் ஹகோன் மற்றும் ஏராளமான உலகத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
சுவீடன், டென்மார்க், ஸ்பெயின், நெதர்லாந்து, லக்ஸம்பர்க், மொனாகோ மற்றும் ஜோர்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அரசு குடும்பத்தினரும், பிரிட்டன் பட்டத்து இளவரசர் வில்லியம், ஜப்பான் பட்டத்து இளவரசர் அகிஷினோ, உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலன்ஸ்கி உள்பட சுமார் 20 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் ஹரால்டின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மறைந்த பிரிட்டன் மகாராணி விக்டோரியாவின் வம்சாவளியைச் சேர்ந்த நார்வே மன்னர் மூன்றாம் ஹரால்ட், பிரிட்டன் மன்னர் சார்லஸ் மற்றும் ஸ்பெயின் மன்னர் ஆறாம் ஃபெலிப் ஆகியோருக்கு நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Leaders from numerous countries are participating in the funeral ceremony of the late King Harald III of Norway.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





