நேபாள வெள்ளப் பெருக்கில் 288 இந்தியர்கள் மாயம்: மத்திய வெளியுறவுத்துறை தகவல்!நேபாளத்தில் தமிழர்கள்: 4 அமைச்சர்கள் தில்லி செல்கின்றனர்!நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள்: ஐஏஎஸ் அதிகாரிகள் குழு நேபாளம் செல்ல முதல்வர் உத்தரவு!நேபாள பெரு வெள்ளம்: 300க்கும் மேற்பட்ட இந்தியர்களை காணவில்லை!தேர்தல் வழக்குகள்! நிராகரிக்கக் கோரி முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மனு தாக்கல்!ஈஷா மூலம் நேபாளம் சென்ற 80 பேர் மாயம்! ஜக்கி வாசுதேவ் கண்ணீர்!தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை வேண்டும்! முதல்வர் விஜய்க்கு பெ. சண்முகம் கடிதம்!தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலை? இன்றைய நிலவரம்!சீன நாள்காட்டியால்.. தமிழர்களின் நேபாள பயண திட்டம் மாறியதா? தில்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு கெடு விதித்த கரப்பான்பூச்சி மக்கள் கட்சி! காரணம் என்ன?ஒருநாள் விடுமுறைக்குப் பின் மீண்டும் கூடியது பேரவை! செங்கல்பட்டிலிருந்து சென்னை வர 3 மணி நேரம் ஆகிறது: ஆதவ் அர்ஜுனாகுழந்தைகள், முதியோரிடையே அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு: தடுப்பூசி செலுத்த மருத்துவா்கள் அறிவுறுத்தல்

நார்வே மன்னர் ஹரால்ட் உடல்நிலை கவலைக்கிடம்!

நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட்டின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிப்பு...

Norway King Harald

நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் - AP

Published On :27 ஆகஸ்ட் 2026, 3:46 pm IST

நார்வே நாட்டின் மன்னர் ஐந்தாம் ஹரால்ட்டின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நார்வே நாட்டின் மன்னராக, கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வரும் 89 வயதான ஐந்தாம் ஹரால்ட் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டு கடந்த சில வாரங்களாகச் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் தலைநகர் ஆஸ்லோவில் உள்ள தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்னர் ஹரால்ட் சில நாள்கள் கழித்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

இந்த நிலையில், மன்னர் ஹரால்ட்டிற்கு ரத்தத்தில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும்; இதனால், அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், நார்வே அரசு மாளிகை இன்று (ஆக. 27) அறிவித்துள்ளது.

கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து உடல்நிலை பாதிப்பால் மன்னர் ஹரால்ட் ஓய்வுபெற்று வரும் நிலையில், அவரது மகனும் நார்வே நாட்டின் பட்டத்து இளவரசருமான ஹாக்கோன் அரசுப் பிரதிநிதியாகச் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

It has been reported that the health of King Harald V of Norway is in a critical condition.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.