கர்நாடகத்துடன் முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவது நல்லதல்ல! ஓபிஎஸ் பேச்சுமுதல்வர் தலைமையில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்ற மாணவர்கள்!சென்னையில் இன்று முதல் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2400 உயர்வுதமிழ் மீதான தாக்குதல்.. அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்புக் கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!
/

நீதிக் கதைகள்! பேராசை பெரு நஷ்டம்!

குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய நீதிக் கதை.

News image

நீதிக் கதைகள்! பேராசை பெரு நஷ்டம்! - படம்: சிறுவர் மணி

Updated On :11 ஆகஸ்ட் 2026, 11:12 am IST

மன்னருக்கு மீன் கொண்டு வந்தான் ஒரு மீனவன். அரிதான இந்த மீனை தாங்கள் வாங்குவது பொருத்தமாக இருக்கும் என்றான்.

மன்னரும் மகிழ்ந்து அவனுக்கு ஆயிரம் பொற்காசுகள் கொடுத்தார். மன்னரின் மைத்துனர் கொதித்துவிட்டார். ஒரு அற்ப மீனுக்கு இவ்வளவு பணமா? "அதைத் திரும்ப வாங்குங்கள்" என்றார்.

"முடிந்த வியாபாரத்தை மாற்றுவது அழகல்ல" என்றார் மன்னர்!

"சரி..... அவனைக் கூப்பிட்டு இந்த மீன் ஆணா?..., பெண்ணா?..., என்று கேளுங்கள்..... ஆண் மீன் என்று அவன் சொன்னால் பெண் மீன்தான் வேண்டும் என்றும்...., பெண் மீன் என்று சொன்னால் ஆண் மீன்தான் வேண்டும்..." என்றும் கேளுங்கள்.

எப்படியும் அவனிடமிருந்து பொற்காசுகளைத் திரும்ப வாங்க வேண்டும் என்று நினைத்தார் மைத்துனர்!

மீனவன் திருப்பி அழைக்கப்பட்டான். கேள்விக்கணையை மைத்துனர் தொடுத்தார்.

அவன் உஷாராக பதில் சொன்னான். "இது ஆணுமில்லை, பெண்ணுமில்லை. இரண்டின் குணங்களையும் கொண்ட அதிசய மீன்! அதனால்தான் அதை மன்னருக்கு கொண்டு வந்தேன்!" என்றான்.

இந்தப் பதிலில் நெகிழ்ந்தார் மன்னர்! மேலும் ஆயிரம் பொற்காசுகளைக் கொடுத்தார்.

மைத்துனருக்கு எரிச்சல் ஏற்பட்டது. மன்னர் கொடுத்த காசிலிருந்து ஒரு காசு தரையிலிருந்து விழுந்து ஓடியது! மீனவன் அதைத் தேடி எடுத்தான்!

மைத்துனர் கோபத்தின் உச்சிக்கே போனார். "பேராசைக்காரன். கீழே விழுந்த காசை யாவது..... போகட்டுமே.... என்று விட்டானா பாருங்கள்" என்றார் மன்னரிடம்.

அவன் நிதானமாகத் திரும்பிச் சொன்னான். "நான் பேராசையில் அதை எடுக்கவில்லை!....

அந்த நாணயத்தில் மன்னரின் உருவம் இருக்கிறது. யாராவது அதைத் தெரியாமல் மிதித்தால்கூட என்னால் தாங்கிக் கொள்ள முடியாது" என்றான்.

இதனால் இன்னும் மனம் நெகிழ்ந்த மன்னர் மேலும் ஆயிரம் பொற்காசுகளைக் கொடுத்தார்.

நீதி : சில சமயம் வாயை மூடிக்கொண்டு இருந்தாலே செலவுகள் குறையும்!

Summary

A moral story that children should know.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.