சென்னை பக்கிங்காம் கால்வாயில் வாட்டர் மெட்ரோ: டெண்டர் வெளியீடுஅதிமுகவிலிருந்து கொள்கைப் பரப்பு துணை செயலர் அப்சரா ரெட்டி விலகல்! தமிழக அரசு பேருந்துகள் ஒசூரில் நிறுத்தம்: கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்!‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாடு’: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா் ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்! மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு
/

காலமும் நேரமும் இல்லை!

இரவு ஒரு மணிக்கு நல்ல வெளிச்சத்துடன் சூரிய ஒளியைக் காணவேண்டுமா? பிற்பகல் ஒரு மணிக்கு வானில் ஒளிவிடும் நட்சத்திரங்களைப் பார்க்க வேண்டுமா?

News image
Updated On :1 ஆகஸ்ட் 2026, 7:54 pm IST

ஜி. குமார்

இரவு ஒரு மணிக்கு நல்ல வெளிச்சத்துடன் சூரிய ஒளியைக் காணவேண்டுமா? பிற்பகல் ஒரு மணிக்கு வானில் ஒளிவிடும் நட்சத்திரங்களைப் பார்க்க வேண்டுமா? கடிகாரங்களை உதறிவிட்டு மணி பார்க்க வேண்டிய அவசியமே இல்லாமல் இருக்க வேண்டுமா? இதெல்லாம் ஐரோப்பாவின் நார்வே நாட்டில் உள்ள சோமோராய் என்கின்ற சிற்றூரில்தான். அது ஒரு தீவும்கூட!

நார்வே நிலப் பகுதியிலிருந்து சற்றே பிரிந்து வடக்கில் ஆர்க்டிக் அருகில் அமைந்துள்ள சிற்றூர் சோமோராய். கோடைத் தீவான இது கோடை வாசஸ்தலமாக மாறியுள்ளது. நார்வே மக்கள் இந்தத் தீவுகளுக்கு பழங்காலத்தில் கோடையில் கால்நடைகளை மேய அழைத்து வருவார்கள்.

வடதுருவத்தில் ஆறு மாதம், பகல் ஆறு மாதம் இரவாகும். வட துருவத்திலிருந்து தென் பகுதியில் ஆர்க்டிக் வட்டத்தின் மேற்புறமும் அமைந்துள்ள சோமோராயில் மே 18-ஆம் தேதி முதல் ஜூலை வரை சூரியன் மறைவதில்லை. 24 மணி நேரமும் பகல்தான். எந்த நேரம் வேண்டுமானாலும் அலுவலகம் செல்லலாம். மீன் பிடிக்கலாம். கடலில் நீர் விளையாட்டுகளை மேற்கொள்ளலாம். எப்போதும் தெளிவான நீர்ப்பரப்பில் டால்ஃபின்கள், திமிங்கலங்கள் ஒதுங்குவதைக் கண்டு ரசிக்கலாம். அதிக மக்கள் இல்லாத ஊர். எனவே எந்த நேர மண்டலத்துக்கும் கட்டுப்படாத சிற்றூராக விளங்குகிறது.

அதேபோல் நவம்பர் தொடங்கி ஜனவரி மாதம் வரை கதிரவனைப் பார்க்கவும் இயலாது. சோமோராய்க்கு வானில் அரோராபோரெலிஸ்' எனப்படும் ஒளிமயமான வண்ண ஒளிக்கீற்றுகளைக் காணவும் சுற்றுலாப் பயணிகள் அலைமோதுகின்றனர். பச்சை, சிவப்பு, வயலெட் நிறங்களில் வானிலிருந்து ரிப்பன்கள் தொங்கி நடனம் ஆடுவதைப் போன்ற காட்சி தென்படும். இயற்கையாக நிகழும் காட்சி !

வானில் சூரிய ஒளியால் ஏற்படும் மின் துகள்கள், புவியில் உள்ள வாயு மண்டலத்தில் உள்ள பல வாயுக்களுடன் மோதும்போது இத்தகைய ஒளி பிறக்கிறது. அரோரா' என்பது ரோம் நாட்டின் இளவரசி அல்லது தேவதையின் பெயர். பொரியாஸ்' என்பது வட திசைக் காற்றைக் குறிக்கிறது.

நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு நார்வே என்பது சரிதானே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.