
நேபாள வெள்ளத்தில் 644 பேர் மாயம்; இந்தியர்கள் 178 பேர்! - நேபாள அரசு அறிவிப்பு!
நேபாள வெள்ளத்தில் 644 பேர் மாயமாகியிருப்பதாக அந்நாட்டு அரசு அறிவிப்பு...

நேபாள வெள்ளம் - ANI
நேபாள வெள்ளத்தில் சிக்கி மொத்தம் 644 பேர் காணாமல் போயிருப்பதாக அந்நாட்டின் சுற்றுலா வாரியம் வியாழக்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது.
திபெத் எல்லையையொட்டி நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் போடே கோஷி ஆற்றில் புதன்கிழமை ஏற்பட்ட வெள்ளம் அந்த நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது மிகவும் மோசமான பேரிடர் என்றும் பாதிப்புகள் அதிகமிருக்கும் என்று அந்த நாட்டு அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த வெள்ளப் பெருக்கில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 165 ஆக உயர்ந்துள்ளது. மேலும், வெளிநாடுகளிலிருந்து சுற்றுலா வந்தவர்கள் உள்பட நூற்றுக்கணக்கானவர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகியுள்ளனர்.
நேபாள ராணுவமும், மீட்புப் படைகளும் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், நேபாள சுற்றுலா வாரியம் காணாமல் போனவர்களின் எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், நேபாளத்தைச் சேர்ந்த 127 பேர், இந்தியாவைச் சேர்ந்த 178 பேர் உள்பட மொத்தம் 33 நாடுகளைச் சேர்ந்த 644 பேர் காணாமல் போயிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த 65 பேர், உக்ரைனைச் சேர்ந்த 53 பேர், மலேசியா 51, ஆஸ்திரேலியா 35, கனடா 25 பேர் மாயமாகியுள்ளனர்.

Summary
644 people missing in Nepal floods; 178 are Indians! – Nepal government announcement!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





