தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ. 95.57 ஆக நிறைவு!மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?விழாக்கோலத்தில் தில்லி! பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களின் பட்டியல்!!அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்! லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த பெண் காணவில்லை!

சுற்றுலாவுக்குச் சென்ற சிதம்பரத்தைச் சேர்ந்த பெண், நேபாள வெள்ளத்தில் மாயமானது குறித்து...

 Nepal floods

நேபாள வெள்ளப்பெருக்கால் மேடான பகுதியில் குவிந்த மக்கள் - பிடிஐ

Published On :

நேபாளத்தில் இன்று (புதன்கிழமை) ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் கடலூர் மாவட்டத்தில் இருந்து சுற்றுலா சென்ற 12 பேரில், சிதம்பரத்தைச் சேர்ந்த கலைமதி என்ற பெண் காணவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த கனகசபை (68), அவரது மனைவி ராதை (64), ராமலிங்கம் மகன் முத்துகுமரேசன் (56), நவுகபிர்தாஸ் (55), விஜயா புவனேஸ்வரி (55), மைதிலி (49), ரத்தினம் மகன் தியாகராஜன் (50), முருகானந்தம் (70), மாணிக்கம் பெருமாள் மகன் பழனியப்பன் (70), அவரது மனைவி கலைமதி (67), நெய்வேலியைச் சேர்ந்த கோவிந்தராசு மகன் திருமாவளவன் (62), புவனகிரியைச் சேர்ந்த திரிபுரசுந்தரி (67) ஆகிய 12 பேர் கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி நேபாளத்துக்கு சுற்றுலா சென்றனர்.

இந்நிலையில், நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் உள்ள போதேகோசி ஆற்றில் புதன்கிழமை காலை திடீரென ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக பல்வேறு பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.

ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் வீடுகள், சாலைகள், பாலங்கள் உள்ளிட்டவை சேதமடைந்ததுடன், சுற்றுலாப் பயணிகள் சென்ற பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

நேபாள சுற்றுலா வாரியத்தின் தகவலின்படி, பாதிக்கப்பட்ட பகுதிகளில் 105 இந்தியர்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ளப் பெருக்கில் குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் மாயமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேபாள ராணுவம், போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் தேடுதல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 12 பேர், கடந்த ஆக. 22-ஆம் தேதி நேபாளத்துக்குச் சென்ற நிலையில், அவர்களில் கலைமதி மட்டும் வெள்ளத்தில் மாயமானதாகக் கூறப்படுகிறது. கலைமதியின் நிலை குறித்து அதிகாரிகள் மூலம் தகவல் பெறும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Summary

Elderly woman from Chidambaram missing in Nepal floods

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.