தவெக கூட்டணிக்கு பாமக வந்தால், விசிக வெளியேறும்! அமைச்சர் வன்னி அரசுவிசிக கூட்டணியைத் தக்கவைத்த திமுக விரும்பவில்லை: திருமாவளவன்எரிபொருள் போர்நிறுத்தம் அறிவிப்பு: உக்ரைன் - ரஷியா மீற வேண்டாம்! டிரம்ப் எச்சரிக்கைஎங்கள் செல்போன்களை பறித்தது காவல் துறை; ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் - சிஜேபி செளரவ் தாஸ்தில்லியில் தொடரும் சிஜேபி போராட்டம்: எம்பி ஜான் பிரிட்டாஸ் உட்பட 100 பேர் கைது! நாளை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! நாட்டில் 1300க்கும் அதிகமான பல்கலை., 5000க்கும் அதிகமான கல்லூரிகள்: பிரதமர் மோடிமத்திய - மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய்

நேபாள பெரு வெள்ளம்! 55 உடல்கள் மீட்பு - நேபாள அரசு தகவல்

நேபாள பெரு வெள்ளத்தில் காணாமல் போனவர்களின் 55 உடல்கள் மீட்கப்பட்டதாக் நேபாள அரசு தகவல் தெரிவித்துள்ளது.

நேபாள பெரு வெள்ளம்

நேபாள பெரு வெள்ளம் - ANI

Published On :

நேபாளத்தின் வடக்கு ராசுவா பகுதியில் இன்று காலை போதேகோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில், சிக்கி அடித்துச் செல்லப்பட்ட 55 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக நேபாள அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக, நேபாள வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை வெளியாகி வந்த நிலையில், பலி எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 55 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தின் போதேகோஷி ஆற்றின் ருத்ரதாண்டவத்தால் ரஸ்வாகதி என்ற பகுதியே அடையாளம் தெரியாமல் உருகுலைந்து போயிருக்கிறது. ஆற்று வெள்ளத்தில் 400க்கும் மேற்பட்டோர் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் 55 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெவித்துள்ளது.

மேலும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களைத் தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வெள்ளத்தில் சிக்கியவர்களில் 88 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது.

போதேகோஷி ஆற்றின் வெள்ளம் திரிசூலி வழியாக, கண்டகி ஆற்றில் சேரும் என்பதால், இந்திய எல்லைப் பகுதிகளிலும் பிகாரிலும் பெரும் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தின் சுற்றுலா வாரியம் சார்பில், நாட்டில் தங்கியிருந்த 291 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் நிலை என்ன என்று தெரியவில்லை என அறிவித்துள்ளது.

மேலும், தமிழ்நாட்டிலிருந்து கைலாய யாத்திரை சென்றிருந்த 57 பேர் குழு பத்திரமாக இருப்பதாகக் கூறப்பட்டாலும், சுற்றுலா அழைத்துச் சென்ற ஏஜென்ஸி தரப்பில், ஒரு பேருந்து வெள்ளத்தில் சிக்கியதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

Summary

Massive floods in Nepal! 55 bodies recovered – Nepal government reports.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.