
நேபாள பெருவெள்ளம் எப்படி நேரிட்டது? பிகாருக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்!
நேபாள பெருவெள்ளம் எப்படி நேரிட்டது என்பது பற்றியும் பிகாருக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படுமா என்பது பற்றியும்..

நேபாள பெருவெள்ளம் - AP
நேபாளத்தின் வடக்கு ராசுவா பகுதியில் இன்று காலை போதேகோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில், ரஸ்வாகதி என்ற பகுதியே அடையாளம் தெரியாமல் உருகுலைந்து போயிருக்கிறது.
தமிழ்நாட்டின் கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 36 பெண்கள் உள்பட 57 பேர் நேபாளத்தில் சிக்கித் தவித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 23ஆம் தேதி இரவு கைலாய யாத்திரைக்கு கும்பகோணத்திலிருந்து ஒரே விமானத்தில் புறப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு குழு சென்ற பேருந்து வெள்ளத்தில் சிக்கியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை.
நடந்தது என்ன?
இன்று காலை 8.30 மணிக்கு மிகப்பெரிய வெடிப்பு சப்தம் கேட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டு பனிப்பாறைகள் வெடித்ததால் அல்லது பனிப்பாறைகள் சரிந்து விழுந்து அவை போதேகோஷி ஆற்றில் வெள்ளமாக பெருக்கெடுத்து வந்துள்ளது.
போதைகோஷி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து, ரஸ்வாகதி பகுதிக்கு வந்தபோது, கரையோரத்தில் இருந்த கட்டங்கள் 19 பாலங்கள், மின் இணைப்பு நிலையங்களை சுருட்டிக்கொண்டு ஓடியது.
இந்த திடீர் அதிப்பெருக்கு வெள்ளம் ஏற்பட்டதற்கு திடீர் நில அதிர்வு ஏற்பட்டு பனிப்பாறைகள் உடைந்து அல்லது பனிப்பாறைகள் சரிந்து திடீரென ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த போதேகோஷி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், மேலும் அபாயத்தை அதிகரிக்கும் வகையில், இது திரிசூலி ஆற்றுடன் போதை கோஷி ஆறு இணையும்போது மேலும் நிலைமை மோசமடையலாம் என அஞ்சப்படுகிறது.
அதன்பிறகு இவை கிளை ஆறுகளாக பிரிந்து ஒரு பகுதி பிகாருக்கு வெள்ளமாக வரும் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிகாருக்குள் பாயும் ஆறானது கண்டகி ஆறு என அழைக்கப்படுகிறது.
பிகாருக்கு என்ன ஆபத்து?
போதேகோஷி ஆற்றில் திடீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவரும் நிலையல், கண்டறி ஆற்றில் இணையும் திரிசூலி ஆற்றுப் படுகையில் நீர்மட்டம் திடீரென உயரும் அபாயம் உள்ளது. என முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வால்மிகினகரில் உள்ள அனைத்து 36 மதகுகளும் திறக்கப்பட்டதாக பிகார் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
கண்டகி ஆற்றங்கரையோரம் உள்ள முசாஃபர்பூர், வைஷாலி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கரையோரப் பகுதிகள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை படை சில பகுதிகளுக்கு விரைந்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன
நிலைமையை கண்காணிக்க தொழில்நுட்பக் குழுவினரும் விரைந்துள்ளனர். ஒருவேளை, நள்ளிரவில் பிகாரில் கண்டகி ஆற்றில் வெள்ளப்பெருக்கு நேரிட்டால் நிலைமையை சமாளிப்பதில் சிக்கல் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.
இதற்கிடைய, 291 வெளிநாட்டினர் உள்பட 384 சுற்றுலாப் பயணிகளை காணவில்லை என்று நேபாள சுற்றுலா வாரியம் அறிவித்துள்ளது.
திபெத்திலிருந்து நோபளம் வழியாக போதேகோஷி ஆறு திரிசூலியுடன் இணைந்து பிறகு கண்டகி ஆறாக பிகாருக்குள் பாய்கிறது.
நேபாள விபத்து தொடர்பான தகவல்களுக்காக தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் கட்டுப்பாட்டறை அமைக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டறையை +977 985 131 6807 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த கட்டுப்பாட்டறைக்கு நமது தினமணி குழு தொடர்பு கொண்டு கேட்டபோது, தமிழ்நாட்டில் இருந்து சென்ற சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
Summary
How massive floods in Nepal occur A huge threat to Bihar
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





