
பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்
பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெகதான் என அமைச்சர் அருண்ராஜ் பேசியது குறித்து...

அமைச்சர் அருண்ராஜ் - கோப்புப் படம்
”பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெகதான்” என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் செவ்வாய்க்கிழமை (ஆக. 26) பேசினார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அருண்ராஜிடம், பாஜகவை கொள்கை எதிரி என விமர்சித்துவிட்டு, தற்போது தவெக அமைதியாக இருக்கிறதா? எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்து அமைச்சர் அருண்ராஜ் பேசியதாவது:
பாஜக அரசை உண்மையாக எதிர்க்கிற ஒரே கட்சி தமிழக வெற்றிக் கழகம்தான். கரூர் விவகாரம் மற்றும் ஜன நாயகன் பட விஷயம் போன்ற பிரச்னைகளில் அதிகளவில் அழுத்தங்கள் இருந்தன.
நமக்கு எது பலத்தைக் கொடுக்கிறது என்றால், நாம் மக்களுக்கு உண்மையாக உள்ளோம். நாம் அச்சப்பட வேண்டிய அளவுக்கு நமக்கு எந்தக் குற்றப் பின்னணியும் இல்லை.
திமுகவுக்குதான் அந்தப் பிரச்னை உள்ளது. அந்தக் கட்சியைச் சார்ந்த ஒவ்வொரு அமைச்சர்களின் மீதும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆகையால் அவர்கள்தான் சமரசம் செய்ய வேண்டிய சூழல் உள்ளது.
எங்களைப் பொறுத்தவரை, எங்கள் தலைவரைப் பொறுத்தவரை எந்தவித சமரசமும் இல்லாமல் மாநில உரிமைகளுக்கும், அடையாளத்துக்கும் தொடர்ந்து குரல் கொடுப்போம் என்று அருண்ராஜ் தெரிவித்தார்.
Summary
"TVK is the only party opposing the BJP," said Minister for Medical and Family Welfare Arunraj on Tuesday (Aug. 26).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






