FOLLOW US

ON GOOGLE DISCOVER

சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

முழுஉடல் பரிசோதனை, 2500 புதிய செவிலியர் பணியிடங்கள்... அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்ட அறிவிப்புகள்!

அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்ட அறிவிப்புகள் குறித்து...

News image

அமைச்சர் அருண்ராஜ் - படம்: விடியோ கிளிப்

Updated On :17 ஆகஸ்ட் 2026, 6:26 pm IST

சட்டப்பேரவையில் நடைபெற்ற மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில், அமைச்சர் அருண்ராஜ் பதிலுரை வழங்கி, அறிவிப்புகளை வெளியிட்டார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்ட அறிவிப்புகள்:

முதல்முறையாக சமூகம், குடும்பம் மற்றும் தனிமனித அளவில் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியை மேம்படுத்தக் கூடிய வகையில் புதிய "Positive Health Policy" உருவாக்கப்படும். இதன் தொடர்பாக அனைத்து தகவல்களும் அனைத்து மக்களுக்கும் கிடைக்கக்கூடிய வகையில் புதிய "நலம் 360 செயலி" அறிமுகப்படுத்தப்படும்.

மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு தலைமை மருத்துவமனைகளில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மாவட்ட எதிர்கால சுகாதாரத் தேவைகளுக்கு ஏற்ப, நவீன மருத்துவக் கட்டமைப்பை உருவாக்கும் வகையில், "மருத்துவக் கட்டமைப்புகளுக்கான வடிவமைப்பு திட்டம்" (Master Plan for Health Infrastructure) ரூ.10 கோடி மதிப்பீட்டில் படிப்படியாக தயாரிக்கப்படும்.

தமிழகத்தில் ஆரம்ப சுகாதார மருத்துவ சேவை (Primary Health Care) கிட்டத்தட்ட அனைத்து மக்களுக்கும் கிடைக்கக்கூடிய வகையில் பரவலாக்கப்பட்டுவிட்டன. நம் அடுத்த இலக்கு, அனைத்து மாவட்டங்கள் அளவிலேயே Super speciality என்று சொல்லப்படுகிற உயர் சிறப்பு மருத்துவ சிகிச்சை வசதியை கொண்டு வருவதுதான். இதற்காக 284 உயர் சிறப்பு மருத்துவ பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்படும்.

தமிழ்நாட்டில் முதல் முறையாக, 70 வயதிற்கு மேற்பட்ட சுமார் 38 லட்சம் மூத்த குடிமக்களுக்கு வருமான உச்ச வரம்பு இன்றி, கட்டணமில்லா மருத்துவ சிகிச்சைகள் பெறும் வகையில் "முதலமைச்சரின் முதியோர் காப்பீட்டுத் திட்டம்" (Chief Minister's Elderly Health Insurance Scheme) என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணிபுரியும் செவிலியர்கள் பணி நிரந்தரம் கோரி பல ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகிறார்கள். அவர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, முதல்கட்டமாக, 2,500 செவிலியர் பணியிடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டு, தொகுப்பூதியத்திலிருந்து தற்போதைய காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.

முப்பது வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து பொதுமக்களுக்கும், நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சையை வழங்கும் வகையில், 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், 295 அரசு மருத்துவமனைகள், 424 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், 39 நகர்ப்புற சமுதாய சுகாதார மையங்கள் மற்றும் 463 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆண்டிற்கு ஒருமுறை 14 அடிப்படை பரிசோதனைகளை உள்ளடக்கிய "நலம் - ஒருங்கிணைந்த இலவச உடல்நலப் பரிசோதனை" (Comprehensive Free Health Checkup) ரூ.51 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

Summary

During the debate on the demands for grants for the Department of Health and Family Welfare in the Legislative Assembly, Minister Arunraj delivered a reply and made announcements.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.