மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியலை மருத்துவத் துறை அமைச்சர் அருண்ராஜ் இன்று (ஆக. 10) வெளியிட்டார்.
சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகத்தில் இன்று (ஆக.10) நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அருண்ராஜ் கலந்துகொண்டு, 2026 - 2027 ஆண்டிற்கான இளநிலை மருத்துவம், பல் மருத்துவம், மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கான மாணவர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டார்.
அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 41,723 பேரும் நிர்வாக இடங்களுக்கு 30,904 பேரும் விண்ணப்பித்திருந்தனர். நீட் நுழைவுத் தேர்வில் 61,306 பேர் தேர்ச்சி பெற்றனர்.
மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடபதி வேலாயுதம் என்ற மாணவர் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீநிகா, 2வது இடத்தையும், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சுடர், 3வது இடத்தையும், சென்னையைச் சேர்ந்த வாணிஷா சதிஷ் 4வது இடத்தையும், ஈரோட்டைச் சேர்ந்த சபரி, 5வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் ஐந்து பேரும், மாணவிகள் ஐந்து பேரும் இடம் பிடித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு பேர் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
இதுவரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 72,633 ஆகும். இதில் 7.5% அரசுப் பள்ளி மாணவர்களின் உள்ஒதுக்கீட்டுக்கு 4,860 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன. விளையாட்டுப் பிரிவுக்கு 468 விண்ணப்பங்களும், முன்னாள் படைவீரர் பிரிவு ஒதுக்கீட்டிற்கு 524 விண்ணப்பங்களும் பெறப்பட்டிருந்தன. மேலும், மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டு பிரிவுக்கு 212 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
2026 - 2027 ஆம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் 41,726. அதில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்கள் 35,926. இதில் மாணவர்கள் 12,551, மாணவிகள் 23,375 ஆவர்.
7.5% அரசுப் பள்ளி மாணவர்களின் உள்ஒதுக்கீட்டிற்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் சேர்க்கைக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர்களிடம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் 4,860. இதில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மொத்த விண்ணப்பங்கள் 3,625. இதில் மாணவர்கள் 981, மாணவிகள் 2,644 என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Rank list for medical courses released by Minister Arunraj
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கால்நடை மருத்துவப் படிப்புகள்: தரவரிசைப் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் 600 எம்பிபிஎஸ் இடங்கள் குறையக் காரணம் என்ன? அருண்ராஜ் விளக்கம்

அதிக கட்டணம் கூடாது! தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் அருண்ராஜ் எச்சரிக்கை!

வெளிநாட்டிலிருந்து பரவும் நோயையும் போலியோ சொட்டுமருந்து தடுக்கும்: அமைச்சர் அருண்ராஜ்
விடியோக்கள்

"நான் அப்படித்தான் பேசுவேன்; உங்களுக்காக மாத்திக்க முடியாது!" மரிய வில்சன் ஆவேசம்!




