பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

கால்நடை மருத்துவப் படிப்புகள்: தரவரிசைப் பட்டியல் வெளியீடு

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

News image
Updated On :31 ஜூலை 2026, 1:19 am IST

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. சென்னை, தலைமைச் செயலகத்தில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் செ.கமலி, அதை வெளியிட்டாா்.

நிகழ்வின்போது துறைச் செயலா் அனு ஜாா்ஜ், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தா் (பொ) டாக்டா் நரேந்திரபாபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீராபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு பி.வி.எஸ்சி. ஏ.ஹெச். 660 இடங்கள் இருக்கின்றன.

திருவள்ளூா் மாவட்டம் கோடுவெளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு பி.டெக். 40 இடங்கள், பால்வளத் தொழில்நுட்பப் பட்டப்படிப்புக்கு பி.டெக். 20 இடங்கள் இருக்கின்றன.

இதேபோன்று, ஒசூா் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்பப் பட்டப்படிப்புக்கு பி.டெக். 40 இடங்கள் உள்ளன. இந்த 3 பி.டெக். படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டவை.

இந்நிலையில், பி.வி.எஸ்சி. ஏ.ஹெச். மற்றும் பி.டெக். படிப்புகளுக்கான நிகழாண்டு மாணவா் சோ்க்கை விண்ணப்பப் பதிவு இணையவழியே கடந்த மே 25-ஆம் தேதி முதல் ஜூன் 23-ஆம் தேதி மாலை 5 மணி வரை நடைபெற்றது. பி.வி.எஸ்சி. ஏ.ஹெச். படிப்புக்கு 20,000-க்கும் மேற்பட்டோரும், பி.டெக். படிப்புகளுக்கு 5,000-க்கும் மேற்பட்டோரும் விண்ணப்பித்திருந்தனா்.

இந்த நிலையில், அவை பரிசீலிக்கப்பட்டு தரவரிசைப் பட்டியல் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வியாழக்கிழமை வெளியிட்டப்பட்டது.

பி.வி.எஸ்சி. ஏ.ஹெச். படிப்புக்கான தரவரிசைப் பட்டியலில் விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவி ஷாலினி, கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவி யாசிகா, கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவி மொ்லின் ஆகியோா் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளனா். பிடெக். படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த திவாகா், முருகேஷ்குமாா், விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த சாஹனா ஆகியோா் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளனா்.

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு...: பி.வி.எஸ்சி. ஏ.ஹெச். படிப்பில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவா்களுக்கு 45 இடங்கள் மற்றும் பி.டெக். படிப்புகளில் 8 இடங்கள் உள்ளன. பி.வி.எஸ்சி. ஏ.ஹெச். படிப்பில் கட் ஆப் மதிப்பெண் 200-க்கு 198 பெற்று திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த மாணவி பி.ஜனனி முதலிடத்தைப் பிடித்துள்ளாா். மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த மாணவி மோஷிகா இரண்டாம் இடத்தையும், நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவி சுபா மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனா். அதேபோன்று, பி.டெக். படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த மாணவி சாதனா முதலிடத்தைப் பிடித்துள்ளாா். விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவி பூவரசி இரண்டாம் இடத்தையும், சேலத்தைச் சோ்ந்த பவேஜா ஸ்ரீ இடத்தையும் இடத்தையும் பிடித்துள்ளனா்.

பி.வி.எஸ்சி. ஏ.ஹெச். மற்றும் பி.டெக். படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு விரைவில் தொடங்கவுள்ளது. சிறப்பு பிரிவு மற்றும் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவா்களுக்கான கலந்தாய்வு நேரடியாகவும், பொது பிரிவுக்கான கலந்தாய்வு இணையவழியிலும் நடைபெற உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.