செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கைதாகிறாரா?பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

கால்நடை மருத்துவப் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு!

கால்நடை மருத்துவப் படிப்புக்கான தரவரிசைப்பட்டியலில் முதல் ஐந்து இடங்களைப் பெற்ற மாணவர்கள் குறித்து...

News image

கால்நடை மருத்துவப் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியிட்ட கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் செ. கமலி . - டிஎன்எஸ்

Updated On :30 ஜூலை 2026, 2:50 pm IST

தமிழ்நாடு கால்நடை மருத்துவப் படிப்பிற்கான தரவரிசை பட்டியலை வியாழக்கிழமை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் செ. கமலி வெளியிட்டார்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 2026-27 ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு (B.V.Sc & A.H.) மற்றும் இளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்புகளுக்கான (பி.டெக் உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு, பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு, கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு) தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் தரவரிசைப்பட்டியல் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் செ. கமலி வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறையின் அரசு செயலர் அனு ஜார்ஜ், பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் துணைவேந்தர்(பொறுப்பு) முனைவர். இர. நரேந்திரபாபு மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி முனைவர். ச.மு.க. கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தரவரிசைப்பட்டியலில் முதல் ஐந்து இடங்களைப் பெற்ற மாணவர்களின் (B.V.Sc & A.H. மற்றும் B.Tech) விவரங்களும் வெளியிடப்பட்டன.

தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் தரவரிசைப்பட்டியலை (B.V.Sc & A.H. மற்றும் B.Tech) பல்கலைக்கழக இணையதளத்தில் https://adm.tanuvas.ac.in அல்லது https://tanuvas.ac.in காணலாம்.

மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு விவரங்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் விரைவில் அறிவிக்கப்படும். தரவரிசைப் பட்டியலில் உள்ள சந்தேகங்களுக்கு 31.7.2026 முதல் 2.8.2026 வரை 044-29997349 மற்றும் 044-29997348 என்ற தொலைபேசி எண்களிலோ அல்லது admission@tanuvas.org.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளவும்.

Summary

Tamilnadu Veterinary science courses rank list today released

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.