முதல்வர் விஜய் குறித்து அவதூறு!அனிதா ராதாகிருஷ்ணன் முன்ஜாமீன் கோரி மனு! முதல்வர் விஜய்யுடன் இரு கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்திப்பு! மாலை கூட்டத்தில் பங்கேற்பில்லை! அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் விலகல்! தவெகவில் இணைகிறார்?அதிமுக மகளிரணி கூட்டம்: எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பங்கேற்கவில்லை!மத்திய குற்றப் பிரிவில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆஜர்புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்! மாநிலம் வாரியாக ஊதிய விவரம்!!எம்பாப்பே இரட்டை கோல்! ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பிரான்ஸ்!வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது! மறைந்த கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு!முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைகிறார் சி. விஜயபாஸ்கர்! பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு! எத்தனை பேர் 200க்கு 200 கட்-ஆஃப்?

பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியானது, அதில் 53 பேர் 200க்கு 200 கட்-ஆஃப் பெற்றுள்ளனர்.

News image

பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு. - கோப்புப் படம்

Updated On :1 ஜூலை 2026, 11:43 am IST

தமிழ்நாடு பொறியியல் மாணவர்கள் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை உயர் கல்வித் துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் இன்று காலை வெளியிட்டார்.

சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குநரக அலுவலகத்தில் இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவதற்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

மாணவர்கள், www.tneaonline.org என்ற இணையதள முகவரியில் தரவரிசைப் பட்டியலை அறிந்துகொள்ளலாம்.

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு மொத்தம் 3.02 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், சுமார் 2.5 லட்சம் பேர் பதிவுக் கட்டணம் செலுத்தியிருந்தனர். அவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தரவரிசை வெளியிடப்பட்டதில் 1,30,767 பேர் மாணவர்கள், 1,05,246 பேர் மாணவிகள் என மொத்தம் 2,36,017 பேருக்கு தரவரிசை வெளியாகியிருக்கிறது.

இன்று வெளியிடப்பட்டிருக்கும் தரவரிசைப் பட்டியலில் 53 மாணவர்கள் 200க்கு 200 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளனர் என்று அமைச்சர் விஸ்வநாதன் அறிவித்துள்ளார்.

நிகழாண்டு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) பிளஸ் 2 வகுப்பு மறு மதிப்பீட்டு முடிவுகள் (ஜூன் -21) தாமதமாக வெளியானது. இதனால், தமிழ்நாடு பொறியியல் மாணவர்கள் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு, இறுதியாக இன்று வெளியாகியிருக்கிறது.

பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு (கவுன்சிலிங்) தேதிகளும் இன்று அறிவிக்கப்படுகிறது.

இன்று வெளியான தரவரிசைப் பட்டியலில் ஏதேனும் குறைகள் இருந்தால் அவற்றைச் சரிசெய்வதற்கான குறைதீர்ப்பு கால அவகாசம் ஜூலை 1 முதல் ஜூலை 5- ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.

மாணவர்கள் தங்களுக்கு அருகிலுள்ள தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை சேவை மையங்களை அணுகி, இது குறித்து தீர்வு காணலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Rank list for engineering counseling released! How many scored a cut-off of 200 out of 200?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.