புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்! மாநிலம் வாரியாக ஊதிய விவரம்!!எம்பாப்பே இரட்டை கோல்! ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பிரான்ஸ்!வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது! மறைந்த கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு!முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைகிறார் சி. விஜயபாஸ்கர்! பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்! மாநிலம் வாரியாக ஊதிய விவரம்!!

புதிய ஊரக வேலைத் திட்டத்தில் மாநிலம் வாரியாக ஊதிய விவரம் பற்றி...

News image

புதிய ஊரக வேலைத் திட்டம்.

Updated On :1 ஜூலை 2026, 8:41 am IST

புதிய ஊரக வேலைத் திட்டத்தில் (விபி-ஜி ராம் ஜி) மாநிலம் வாரியாக ஊதிய விவரம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடு முழுவதும் கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு 125 நாள்கள் வேலை வழங்குவதற்கான விபி-ஜி ராம் ஜி எனும் புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் தமிழகத்தில் புதன்கிழமை (ஜூலை 1) முதல் அமல்படுத்தப்படும் எனத் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு தெரிவித்துள்ளது. 

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் கொண்டு வரப்பட்ட மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் எனும் 100 நாள்கள் வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு மாற்றாக ‘வளா்ச்சியடைந்த பாரதம்- ஊரக வேலை மற்றும் வாழ்வாதார திட்டம்’ (விபி -ஜி ராம் ஜி) எனும் திட்டத்தை மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ளது.

2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளா்ச்சியடைந்த நாடாக மாற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய பயணத்தில், கிராமப்புற மேம்பாட்டு கட்டமைப்பை மறுசீரமைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விபி-ஜி ராம் ஜி சட்டம் ஜூலை 1-ஆம் தேதிமுதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வரும் என்றும் மத்திய அரசு அறிவித்திருந்தது.

100 நாள்கள் வேலை இந்தப் புதிய சட்டத்தின் கீழ் தற்போது 125 நாள்களாக உயர்த்தப்பட்டு, இத்திட்டத்துக்காக 2026-27 நிதியாண்டில் ரூ 95,692.31 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. மாநிலங்களின் பங்கையும் சோ்த்தால் மொத்தத் திட்ட மதிப்பு ரூ 1.51 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஊரக வேலைத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக தமிழக அரசு ரிசா்வ் வங்கியில் புதிய கணக்கைத் தொடங்கி உள்ளது. இந்தத் திட்டத்துக்காக தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.7,957.57 கோடி ஒதுக்கியுள்ளது.

ஊதிய விவரம்.

ஊதிய விவரம்.

இந்த நிலையில், மாநில வாரியாக புதிய ஊரக வேலைத் திட்டத்தில் வழங்கப்படவுள்ள ஊதிய விவரம் குறித்த தகவல்கள் வெளியாகியிருகின்றன. அரசு அறிவிப்பின்படி, ஊதிய உயர்வு ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ளன. எந்தவொரு மாநிலத்திலும் தினக்கூலி ரூ.300-க்குக் குறைவாக இருக்காத வகையில் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது.

ஊதிய விவரம்.

ஊதிய விவரம்.

உத்தரப் பிரதேசம், பிகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், அசாம், அருணாச்சல பிரதேசம் மற்றும் ஹிமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஊதிய விகிதங்கள் 15 முதல் 25 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளன. கேரளம், ஹரியானா, பஞ்சாப் மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலங்களில், ரூ.360 முதல் ரூ.409 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மலைப்பகுதி மாநிலமான சிக்கிமில் ரூ. 450 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.