மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அமைச்சர் வெள்ளிக்கிழமை (ஜூலை 3) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகள் குறித்து அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
அரசு மருத்துவமனைகளைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். கட்டடங்களுக்கு வண்ணப்பூச்சு செய்ய வேண்டும் போன்ற அறிவுறுத்தல்களை அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளோம்.
கருவுற்ற பெண்கள் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் புற நோயாளிப் பிரிவில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வருகின்றனர். அரசு சார்பில் “ஆரோக்கியமான பிரசவத்துக்கு யோகா மற்றும் இயற்கை மருத்தவக் குறிப்பேடு” என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை அச்சிட்டுள்ளோம். வரும் காலங்களில் இந்தப் புத்தகம் கருவுற்ற மகளிருக்கு வழங்கப்படும். மேலும், கருவுற்ற மாதத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் எந்த மாதிரியான யோகாசனங்களை செய்ய வேண்டும் என்ற வழிகாட்டுதல் அடங்கிய விடியோ ஒன்று தயார் செய்யப்பட்டு அவை மருத்துவமனைகளில் காட்சிப்படுத்தப்படும்.
தனியார் மருத்த்துவக் கல்லூரிகள் அரசின் வழிகாட்டுதல்படி எவ்வளவு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதோ அதைத்தான் வசூலிக்க வேண்டும். ஆனால் சில கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வருகின்றன. எங்கெல்லாம் புகார்கள் வருகின்றதோ அதனை விசாரிப்பதற்காக தனிக்குழு அமைத்து அந்த மருத்துவக் கல்லூரிகளில் விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளோம்.
அதன்படி, மருத்துவக் கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலித்திருந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆகவே, சட்ட விதிகளுக்குப் புறம்பாக அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று தனியார் மருத்துவக் கல்லூரிகளுகளுக்கு வலியுறுத்துகிறேன் என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
Summary
The Minister for Health and Family Welfare warned private medical colleges on Friday (July 3) against charging excessive fees.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முழுஉடல் பரிசோதனை, 2500 புதிய செவிலியர் பணியிடங்கள்... அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்ட அறிவிப்புகள்!

கல்லூரிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால்..! அமைச்சர் அருண்ராஜ் வலியுறுத்தல்! | TVK

மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

தமிழகத்தில் 600 எம்பிபிஎஸ் இடங்கள் குறையக் காரணம் என்ன? அருண்ராஜ் விளக்கம்
விடியோக்கள்
TVK 100 நாள் ஆட்சி: சாதித்தாரா விஜய்? | TVK Vijay | CM Vijay |




