கூட்டுறவு வங்கிகளில் ரூ. 75,000 வரையிலான விவசாயிகளின் பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யபடுவதாகவும் ரூ. 1 லட்சம் வரை பயிர்க்கடன் பெற்றவர்களுக்கு ரூ. 75,000 தள்ளுபடி செய்யப்படுவதாகவும் பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்தார்.
பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதல்வர் விஜய்,
"மக்கள் எங்கள் உயிர் என்றால் விவசாயிகள் உயிர்நாடி. எந்தவொரு நாடு விவசாயிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்குகிறதோ, அந்த நாடு வளமுடன் செழிப்புடன் இருக்கும்.
அதன்படி தவெக அரசு பதவியேற்றவுடன் 15 நாள்களுக்குள் குறு, சிறு விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது.
பின்னர் விவசாய அமைப்புகளிடம் இருந்து கருத்துகள் பெற்று பயிர்க்கடன் தள்ளுபடிக்கான வரம்பு உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் பயிர்க்கடன் தள்ளுபடியை முழுவதுமாக வழங்கக் கோரிய விவசாயிகளின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டன.
அதன்படி இப்போது கூட்டுறவு வங்கிகள் மூலம் பெறப்பட்டுள்ள விவசாயிகளின் பயிர்க்கடன் ரூ. 75,000 வரை முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படுகிறது.
ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படுகிறது.
ரூ. 75,000 முதல் 1 லட்சம் ரூபாய் வரையிலான பயிர்க்கடனுக்கு ரூ. 75,000 மட்டும் தள்ளுபடி செய்யப்படுகிறது. இதனால் கூடுதலாக 2 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெறுவார்கள்.
ஒரு லட்சத்திற்கு மேல் பயிர்க்கடன் பெற்றவர்களுக்கு ரூ. 35,000 தள்ளுபடி வழங்கப்படும்.
அரசுக்கு கடுமையான நிதிச்சுமை இருந்த போதிலும் இந்த கூடுதல் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு ரூ. 953.06 கோடி கூடுதல் சுமை ஏற்படும்" என்றார்.
முன்னதாக, ரூ. 75,000 வரை முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி, ரூ. 1 லட்சம் வரை பெற்றவர்களுக்கு ரூ. 35,000 மட்டும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Crop loans up to Rs. 75,000 fully waived: Chief Minister Vijay announces
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





