திமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

அந்தக் குழந்தையே நீங்கதான்... யாரைச் சொல்கிறார் முதல்வர் விஜய்!

தாராபுரம் பொதுக்கூட்டத்தில் முதல்வர் விஜய் பேசியது குறித்து....

cm vijay

முதல்வர் விஜய் - படம்: விடியோ கிளிப்

Published On :

கொளத்தூர் தோல்வி குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசியதை, முதல்வர் சி. ஜோசப் விஜய் விமர்சித்துப் பேசியுள்ளார்.

தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளா் சத்தியபாமாவை ஆதரித்து முதல்வா் ச. ஜோசப் விஜய் பிரசாரம் இன்று(செப். 30) மேற்கொண்டார்.

அப்போது முதல்வர் விஜய் பேசும்போது, “மக்கள் அனைவரும் தவெகவுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ததை மறந்துவிட்டும், திமுகவை வீட்டுக்கு அனுப்பியதை மறந்துவிட்டும், இன்னமும் நாம்தான் முதல்வர், நம் குடும்பம்தான் அதிகாரத்தில் இருப்பதுபோன்ற மன்னராட்சி மனப்பான்மை நமக்கு கிடையாது.

மக்களிடம் செல், மக்களுடன் வாழ் என்று அண்ணா கூறியதைதான் நாம் கடைப்பிடிக்கிறோம். ஆனால், இன்று அண்ணாவை மறந்துவிட்டு, தீயசக்தி திமுகவோடு மறைமுகமாக இணைந்து சுயநலத்துடன் சுற்றுபவர்களும் நாம் கிடையாது.

நாம் அரசியலுக்கு வருவதற்கு முன்பே எம்மதமும் நம் மதம் என்று கூறிதான் வந்தோம். கிருஷ்ண ஜெயந்தி, கிறிஸ்துமஸ், பக்ரீத் என அனைத்துக்கும் வாழ்த்து தெரிவிப்போம்.

கொளத்தூர் மக்களுக்கு கோடான கோடி நன்றி என்று கூறுகிறார் மு.க. ஸ்டாலின். அந்தக் குழந்தையே அவர்தான் என்பது போல் உள்ளது. தவறு நடந்திருக்கு, அதனால்தான் மக்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லை என்றுதான் பொருள்.

எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்த இந்த, மற்றும் பலருக்கு ஓட்டு போடுவீற்களா...! கொங்கு பகுதி மக்களே, நீங்கள் சத்தியம் பக்கம்தான் நிற்பீர்கள், அதானல், நீங்கள் சத்தியபாமாவுக்கு வாக்களியுங்கள். மற்றவர்கள் சொல்லும் பொய்யை நம்பாதிர்கள்.

அன்று நடந்தது அம்மா ஆட்சி, அடுத்து நடந்தது அப்பா ஆட்சி. இன்று நடப்பது பிள்ளைகளின் ஆட்சி. நம்ம வீட்டு பிள்ளைகளின் ஆட்சி. இது தான் உண்மையான மக்களாட்சி...!" என்றார்.

Summary

Chief Minister C. Joseph Vijay has criticized DMK leader M.K. Stalin's remarks regarding the defeat in Kolathur.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.