கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!

அனைத்து திருவிழாவுக்கும் வாழ்த்து சொல்வோம்.. தாராபுரத்தில் விஜய் பேச்சு

CM Vijay's speech

தாராபுரத்தில் முதல்வர் விஜய் பேச்சு - X

Published On :

எம்மதமும் சம்மதம் மட்டுமல்லாமல் எம்மதமும் நம்மதம் என்று தாராபுரம் இடைத்தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் முதல்வர் விஜய் பேசினார்.

தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து முதல்வரும் அக்கட்சியின் தலைவருமான விஜய் பிரசாரம் மேற்கொண்டார். நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், சுகாதாரத் துறை அமைச்சர் அருண் ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தாராபுரம் இடைத்தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் முதல்வர் விஜய் பேசியது,

அரசியலுக்கு வருவதற்கு முன் எம்மதமும் சம்மதம் என்று சொன்னது மட்டுமன்று எம்மதமும் நம் மதம் என்று சொல்லிவிட்டுத்தான் அரசியலுக்கு வந்துள்ளோம்.

கடவுள் நம்பிக்கை இருக்கிறது அப்படியென்று சொல்லிவிட்டுத்தான் அரசியலுக்கு வந்துள்ளோம். யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் நாங்கள் எதிரானவர்கள் இல்லை.

உங்களின் நம்பிக்கையை நாங்கள் மதிக்கிறோம். அதனால் தான் நம் கொள்கை மதச்சார்பற்ற நீதி கொள்கை, நம் கூட்டணி மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி.

கிருஷ்ண ஜெயந்திக்கும் வாழ்த்து சொல்வோம். கிருஸ்மஸ்க்கும் வாழ்த்து சொல்வோம். பக்ரீத்துக்கும் வாழ்த்து சொல்வோம். நமக்கு எல்லாம் ஒன்றுதான். எல்லோரும் சமம்தான். மற்ற கட்சியைப் போன்று நாம் இருக்கமாட்டோம் என்று முதல்வர் விஜய் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.