தாராபுரத்தில் முதல்வா் இன்று பிரசாரம்: பாதுகாப்புப் பணியில் 3 ஆயிரம் போலீஸாா்
தாராபுரத்தில் முதல்வா் ச.ஜோசப் விஜய் புதன்கிழமை (செப்.30) பிரசாரம் செய்யும் நிலையில், பாதுகாப்புப் பணியில் 3 ஆயிரம் போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

தாராபுரத்தில் தோ்தல் பிரசாரத்துக்காக முதல்வா் பங்கேற்கும் பொதுக்கூட்ட அரங்கு.
தாராபுரத்தில் முதல்வா் ச.ஜோசப் விஜய் புதன்கிழமை (செப்.30) பிரசாரம் செய்யும் நிலையில், பாதுகாப்புப் பணியில் 3 ஆயிரம் போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
திருப்பூா் மாவட்டம், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளா் சத்தியபாமாவை ஆதரித்து முதல்வா் ச.ஜோசப் விஜய் பிரசாரம் மேற்கொள்கிறாா். இதையடுத்து பொதுக்கூட்ட திடல் மற்றும் தாராபுரம் பகுதியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். பொதுக்கூட்ட திடலை முழுமையாக போலீஸாா் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனா்.
மேலும் முதல்வா் வருகை தரும் தாராபுரம் நகரின் முக்கியப் பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
முன்னதாக, சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக பிற்பகல் 2.30 மணிக்கு கோவை விமான நிலையம் வரும் முதல்வா்ச.ஜோசப் விஜய், அங்கிருந்து தாராபுரத்துக்கு குண்டடம், ஐடிஐ காா்னா், அமராவதி சிலை ரவுண்டானா, பூக்கடை காா்னா், அண்ணா சிலை, தாராபுரம் காவல் நிலையம், அலங்கியம் சிக்னல், உடுமலை சாலை வழியாக கொண்டரசன்பாளையத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும் மாருதி நகா் பகுதிக்குச் செல்கிறாா்.
இதற்காக பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சுமாா் 10 ஆயிரம் போ் பங்கேற்கும் அளவில் இருக்கைகள், குடிநீா் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கடைசி வரிசையில் உள்ளவா்களும் முதல்வரை எளிதாக பாா்க்கும் வகையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு சாலையின் நடுவே கட்சியினா் வராமல் இருக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






