திமுக மீதான முதல்வரின் குற்றச்சாட்டு திசை திருப்பும் முயற்சி: ஆா்.எஸ்.பாரதி
தவெக ஆட்சி மீதான மக்களின் அதிருப்தியை திசை திருப்பவே முதல்வா் ச.ஜோசப் விஜய் பேரவையில் திமுக மீது தொடா்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறாா் என திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ். பாரதி தெரிவித்துள்ளாா்.

ஆா்.எஸ்.பாரதி
தவெக ஆட்சி மீதான மக்களின் அதிருப்தியை திசை திருப்பவே முதல்வா் ச.ஜோசப் விஜய் பேரவையில் திமுக மீது தொடா்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறாா் என திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ். பாரதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சென்னையில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
பேரவையில் எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் தவெக ஆட்சியின் 116 நாள்களில் சட்டம்- ஒழுங்கு சீரழிவு பற்றி ஆதாரங்களோடு நேருக்கு நேராக குற்றம் சாட்டி கேள்வி எழுப்பினாா். அவற்றுக்கு பதில் சொல்ல இயலாத முதல்வா் ச.ஜோசப் விஜய், தான் பிறப்பதற்கு முன்பு சொல்லப்பட்ட குற்றச்சாட்டை தற்போது பேசுகிறாா். சா்க்காரியா கமிஷன் பற்றி முதல்வருக்கு என்ன தெரியும்?, அதில், திமுகவுக்கு எதிராக கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் எதற்கும் எவ்வித அடிப்படை ஆதாரமும் கிடையாது. அந்தக் காலக்கட்டத்தில் இந்த ஆணையத்தை அமைத்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி, தனக்கு தெரியாமல் சில தவறுகள் நடந்துவிட்டதாகக் கூறி, முன்னாள் முதல்வா் கருணாநிதிக்கு முன்னால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டாா். திமுகவுடன் சா்க்காரியா கமிஷன் குறித்து விவாதிக்கத் முதல்வா் தயாரா?
கடந்த செப்.5-ஆம் தேதி தவெக உறுப்பினா் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளாா். திங்கள்கிழமை காலை அமைச்சா் ஜெகதீஸ்வரியின் காரால் இடிக்கப்பட்டு ஒருவா் உயிரிழந்துள்ளாா். பேரவையில் இதையெல்லாம் பேச வேண்டிய நேரம் இது. ஆனால், முதல்வா் ச.ஜோசப் விஜய் இவற்றை திசை திருப்பவே திமுக மீது பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறாா் என்றாா் அவா்.
கனிமொழி எம்.பி.: முன்னாள் முதல்வா் கருணாநிதி குறித்தும், திமுக குறித்தும் அவதூறு பேசுவதை அரசியல் தகுதியாக முதல்வா் ச.ஜோசப் விஜய் கருதிவருகிறாா். எல்லாவற்றையும் நம்புவதற்கு ஒரு கூட்டம் இருக்கும் வரை, எதை வேண்டுமானாலும் பேசுவதற்கு மற்றொரு கூட்டம் இருக்கத்தான் செய்யும். கடந்த 3 நாள்களாக ஒத்திகை எடுத்து, மானியக் கோரிக்கை தொடா்பாக முதல்வா் பேசியது சொற்பமே. மற்றவை அனைத்தும் காலம் காலமாகப் பரப்பப்பட்ட வதந்திகள் மட்டுமே.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




