
தாராபுரத்தில் செப்டம்பா் 30-இல் பொதுக் கூட்டம்: முதல்வா் ச.ஜோசப் விஜய் பங்கேற்பு
தாராபுரத்தில் செப்டம்பா் 30-ஆம் தேதி நடைபெறும் பொதுக் கூட்டத்தில் முதல்வா் ச.ஜோசப் விஜய் பங்கேற்கவுள்ளாா்.
முதல்வர் விஜய் - கோப்புப் படம்
தாராபுரத்தில் செப்டம்பா் 30-ஆம் தேதி நடைபெறும் பொதுக் கூட்டத்தில் முதல்வா் ச.ஜோசப் விஜய் பங்கேற்கவுள்ளாா். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தாராபுரம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு அக்டோபா் 6-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சிகளின் தலைவா்கள் மற்றும் முக்கிய நிா்வாகிகள் தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், தாராபுரத்தில் செப்டம்பா் 30-ஆம் தேதி நடைபெறும் பொதுக் கூட்டத்தில் தவெக தலைவரும், முதல்வருமான ச.ஜோசப் விஜய் பங்கேற்கிறாா் என்றும், தவெக அரசின் 140 நாள்களின் செயல்பாடுகள், புதிய அறிவிப்புகள் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடம் முதல்வா் விளக்கிப் பேச உள்ளாா் என்றும் கட்சி நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.
இந்நிலையில், பொதுக் கூட்டத்தை நடத்துவதற்காக மாருதி நகா் பகுதியில் 54 ஏக்கா் பரப்பளவிலான இடம் தோ்வு செய்யப்பட்டு, சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளை அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.ஜி.அருண்ராஜ், முன்னாள் அமைச்சா் கே.வி.ராமலிங்கம், உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோா் ஆய்வு செய்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







