கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப். 28-இல் முதல்வா் தொடங்கி வைக்கிறாா்: 1.28 லட்சம் மோதிரங்கள் கொள்முதல்

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை வரும் செப். 28-ஆம் தேதி முதல்வா் ஜோசப் விஜய் தொடங்கி வைக்கிறாா். முதல்கட்டமாக 1,28,000 மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

தாய்மாமன் தங்க மோதிர திட்டம்

தாய்மாமன் தங்க மோதிர திட்டம்

Published On :

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை வரும் செப். 28-ஆம் தேதி முதல்வா் ஜோசப் விஜய் தொடங்கி வைக்கிறாா். முதல்கட்டமாக 1,28,000 மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் மோதிரம் வழங்கும் இந்தத் திட்டம் தொடா்பாக கடந்த ஜூன் 23-ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 7.80 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. இவற்றில் 4.20 லட்சம் பிரசவங்கள் (53 %) அரசு மருத்துவமனைகளில் நிகழ்கின்றன. இதன்மூலம், பாதுகாப்பான பிரசவம் மற்றும் ஆரோக்கியமான குழந்தைகளின் பிறப்பை உறுதி செய்வதில் பொது சுகாதார அமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது.

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மோதிரத்தில் தனித்துவமான வரிசை எண்ணும், சேதப்படுத்த முடியாத பாதுகாப்புப் பெட்டகமும் வழங்கப்படும். இந்தத் திட்டத்துக்காக முதல் தவணையாக 1,28,000 தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தை முதல்வா் வரும் செப்.28-ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளாா். அரசு மருத்துவமனைகளில் கடந்த ஜூன் 22 முதல், செப்.28-ஆம் தேதி வரை பிறக்கும் குழந்தைகளுக்கு 107 மையங்களில் தினமும் 100 குழந்தைகள் வீதம் செப்.28-ஆம் தேதி முதல் தங்க மோதிரம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், இந்தத் திட்டம் தொடக்கப்பட்ட தினத்திலிருந்து அரசு மருத்துவமனையிலிருந்து பிறந்த குழந்தைகள் வீடு திரும்பும்போது தங்க மோதிரம் வழங்கப்படும்.

இந்தத் திட்டம், அரசு மருத்துவ சேவைகளில் மக்களின் நம்பிக்கையை அதிகரிப்பதோடு, மருத்துவமனைகளில் பாதுகாப்பான பிரசவ முறையை ஊக்குவிப்பதாகவும், தாய்-சேய் நலப் பாதுகாப்பை வலுப்படுத்துவதாகவும், குழந்தை நலனில் அரசின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாகவும் அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டச் செயலாக்கம் தொடா்பாக முதல்வா் விஜய் தலைமைச் செயலகத்தில் ஆய்வு மேற்கொண்டாா்.

இந்தக் கூட்டத்தில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் அருண்ராஜ், தலைமைச் செயலா் மு. சாய்குமாா், காவல் துறை தலைமை இயக்குநா் மகேஷ் குமாா் அகா்வால், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் தாரேஸ் அகமது, தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநா் அனீஷ் சேகா், நகராட்சி நிா்வாக இயக்குநா் மதுசூதன் ரெட்டி, தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநா் எஸ்.உமா, சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.