கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை
கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி.எஸ். பாபுவின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது குறித்து...
வி.எஸ். பாபு - x / VS Babu
கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி.எஸ். பாபுவின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை செவ்வாய்க்கிழமை (செப். 22) நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபுவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் மருத்துவமனை தரப்பிலிருந்து அவ்வப்போது அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
சுவாசக் கோளாறு காரணமாக 2026 செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள எங்கள் மருத்துவமனையில் எம்எல்ஏ வி.எஸ்.பாபு சிகிச்சை பெற்று வருகிறார்.
பல்துறை மருத்துவர்கள் அவரைத் தொடர்ந்து கணிகாணித்து வருகின்றனர். அவரது உடல்நிலை சீராக உள்ளது. மேலும், தொடர் சிகிச்சைக்கு திருப்திகரமான பலன் கிடைக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மருத்துவமனை அறிக்கை
Summary
The hospital administration stated on Tuesday (Sept. 22) that the health condition of Kolathur constituency MLA V.S. Babu is stable.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






