
கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு நலமாக உள்ளார்: அமைச்சர் மரிய வில்சன்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை தேறி வருவதாக அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.
கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை தேறி வருவதாக அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.
சென்னை கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு மூச்சுத் திணறல் பிரச்னை காரணமாக சென்னையில் அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல்நிலை குறித்து தனியார் மருத்துவமனை தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிடப்பட்டது.
அதில், ”தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர் வி. எஸ். பாபு, மூச்சுத் திணரல் காரணமாக கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் (Critical Care Unit), பல்வேறு மருத்துவத் துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் அடங்கிய குழுவின் கண்காணிப்பில் உள்ளார்.
மருத்துவத் தேவைக்கேற்ப அவருக்கு உரிய சிகிச்சைகளும் சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. அவர் தொடர்ந்து தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகிறார்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், வி.எஸ். பாபு தற்போது நலமாக இருப்பதாக அமைச்சர் மரிய வில்சன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மருத்துவமனையில் வி.எஸ். பாபுவை நலம் விசாரித்து வந்த மரிய வில்சன் செய்தியாளர்களுடன் பேசுகையில், “அவர் தற்போது நலமாக உள்ளார். மருத்துவர்கள் அவர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகத் தெரிவித்தனர். உடல்நிலை தேறி வருகிறது. அவருக்கு சளி பிடித்திருந்தது. இப்போது அது கொஞ்சம் குறைந்திருக்கிறது. என்னிடம் நன்றாகப் பேசினார். அனைவரைப் பற்றியும் விசாரித்தார். தலைவர் விஜய் அவரிடம் போனில் நலம் விசாரித்துள்ளார்” எனத் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலினை எதிர்த்து தவெக வேட்பாளராக போட்டியிட்ட வி.எஸ். பாபு, 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அண்மையில் முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரிலும் வி.எஸ். பாபு பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Minister Maria Wilson stated that the health of Kolathur MLA V.S. Babu is improving.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





