கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபுவின் உடல்நிலை எப்படி இருக்கிறது? மருத்துவமனை அறிக்கை
கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை...

முதல்வர் விஜய்யுடன் வி.எஸ். பாபு - கோப்புப்படம்
கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுபற்றி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"தமிழக சட்டமன்ற உறுப்பினர் வி. எஸ். பாபு, சுவாசக் கோளாறு காரணமாக கடந்த 2026-ஆம் ஆண்டு செப்டம்பர் 9-ஆம் தேதி சென்னை எம்.ஜி.எம். ஹெல்த்கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பல்வேறு மருத்துவத் துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் அடங்கிய குழுவின் தொடர் கண்காணிப்பிலும் பராமரிப்பிலும் உள்ளார். அவரது உடல்நிலை தற்போது சீரான நிலையிலும் திருப்திகரமாகவும் உள்ளது. அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைக்கு அவர் நல்ல முறையில் ஒத்துழைப்பு அளித்து வருகிறார். அவரது ஒட்டுமொத்த உடல்நிலையும் சீராக உள்ளது.
மருத்துவக் குழுவினர் அவரது உடல்நிலை முன்னேற்றமடைவதைத் தொடர்ந்து கண்காணித்து அதற்கேற்ப சிகிச்சைகளை அளித்து வருகின்றனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Hospital report for health condition of Kolathur MLA V.S. Babu
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





