தாராபுரம் இடைத்தேர்தல்: அக். 4-ல் முதல்வர் விஜய் சாலைவலம்!
அக். 4 ஆம் தேதி முதல்வர் விஜய் சாலைவலம் மேற்கொள்ளவிருப்பது தொடர்பாக...
திருச்சியில் வாகனத்தில் நின்றபடி சாலைவலம் செல்லும் விஜய் - X / TVK
தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் சி. ஜோசப் விஜய் வரும் அக். 4 ஆம் தேதி சாலைவலம் மேற்கொள்ளவிருக்கிறார்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு அக்டோபா் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.
தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், நாதக என ஐந்துமுனைப் போட்டி நிலவுகிறது. தவெக - சத்யபாமா, திமுக - சுகன்யா, அதிமுக - பானுமதி, இந்திய கம்யூ. - லட்சுமணன் , நாதக - கார்த்திகா உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில், முதல்வர் சி. ஜோசப் விஜய் தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் சத்யபாமாவை ஆதரித்து அக். 4 ஆம் தேதி சாலைவலம் மேற்கொள்கிறார்.
ருத்ராவதியில் தொடங்கி குண்டடம், தாராபுரம், மூலனூர் வழியாக தாசர்பட்டி வரை சாலைவலம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இபிஎஸ் பிரசாரம்
தாராபுரத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே. பானுமதியை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி வரும் செப். 27-ஆம் தேதி 4 மணிக்கு கன்னிவாடி, 5 மணிக்கு மூலனூர், 6 மணிக்கு கொளத்துப்பாளையம், இரவு 7 மணிக்கு உப்புத்துறைபாளையம் (தாராபுரம் நகர்) ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இரண்டாவது நாளாக திங்கள்கிழமை (செப். 28) மாலை 4 மணிக்கு குண்டடம், 5 மணிக்கு மானூர்பாளையம், 6 மணிக்கு உப்பாறு மூணு ரோடு, இரவு 7 மணிக்கு பொன்னாபுரம் ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறாார்.
மூன்றாவது நாளாக வரும் அக். 2-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு தளவாய்ப்பட்டினம், 6 மணிக்கு தாராபுரம் காவல் நிலையம் அருகில், சாலைவலம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்யவுள்ளார்.
Summary
TVK leader C. Joseph Vijay is set to undertake a roadshow on October 4 in support of the party's candidates contesting the Dharapuram by-election.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




