திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! பேச்சுவார்த்தை தோல்வி– திருச்சியில் 5-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்! முடிவை கைவிடுகிறதா தமிழக அரசு?மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி உதவித்தொகை விடுவிப்புஇந்திய பொருள்கள் மீது 100% வரி: மசோதாவில் கையெழுத்திட்டார் டொனால்ட் டிரம்ப்!யுபிஐ கட்டணம்! 40 காசு செலுத்தினால் செத்துவிட மாட்டீர்கள் - நீதி ஆயோக் துணைத் தலைவர்தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபுவின் உடல்நிலையில் முன்னேற்றம்!

மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு

மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் விஜய் 2 நாட்கள் பிரசாரம் செய்யவிருப்பது பற்றி...

முதல்வர் விஜய்.

முதல்வர் விஜய்

Published On :

முதல்வரும், தவெக தலைவருமான விஜய், மதுராந்தகத்தில் செப்.25 மற்றும் அக்.2ஆம் தேதிகளில் பிரசாரம் செய்கிறார்.

செப்.25இல் மதுராந்தகம் தொகுதி அச்சரப்பாக்கத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் விஜய் பங்கேற்கிறார். அக்.2ஆம் தேதி மதுராந்தகத்தில் சாலைவலம் செல்லும் முதல்வர் விஜய் வாகனத்தில் இருந்தபடியே பிரசாரம் மேற்கொள்கிறார்.

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில், முதல்வரின் மதுராந்தகம் தொகுதி பிரசார தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மது​ராந்​தகம் (தனி), திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) ஆகிய 2 தனித் தொகு​தி​களுக்கும் வருகிற அக். 6 ஆம் தேதியில் இடைத்​தேர்​தல் நடை​பெறவுள்​ளது.

தொடர்ந்து, அக். 9 ஆம் தேதியில் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும். இதற்​கான வேட்​புமனு தாக்​கல் கடந்த செப். 9 ஆம் தேதியில் தொடங்கி செப். 16 ஆம் தேதி​யுடன் முடிவடைந்​தது. இந்த இடைத்தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், நாதக என ஐந்துமுனைப் போட்டி நிலவுகிறது.

Summary

CM and TVK leader Vijay will campaign in Madurantakam on September 25 and October 2.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.