பேச்சுவார்த்தை தோல்வி– திருச்சியில் 5-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்! முடிவை கைவிடுகிறதா தமிழக அரசு?மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி உதவித்தொகை விடுவிப்புஇந்திய பொருள்கள் மீது 100% வரி: மசோதாவில் கையெழுத்திட்டார் டொனால்ட் டிரம்ப்!யுபிஐ கட்டணம்! 40 காசு செலுத்தினால் செத்துவிட மாட்டீர்கள் - நீதி ஆயோக் துணைத் தலைவர்தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபுவின் உடல்நிலையில் முன்னேற்றம்!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி? இறுதி பட்டியல் வெளியீடு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது பற்றி..

TN byelection

இறுதி வேட்பாளர் பட்டியல்... - கோப்புப்படம்

Published On :

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதல்வர் விஜய் போட்டியிட்ட திருச்சி கிழக்கு உள்ளிட்ட 7 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் அதில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக கூட்டணி, திமுக, அதிமுக, நாதக, இடதுசாரிகள் என 5 முனைப் போட்டி நிலவுகிறது. சுயேச்சைகளும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இதற்கான வேட்புமனு தாக்கல் செப். 16 நிறைவடைந்த நிலையில் அதற்கு மறுநாள் வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெற்றது. இன்று (செப். 19) வேட்புமனுவைத் திரும்ப பெற கடைசி நாளாகும்.

அந்த கால அவகாசம் முடிவடைந்த நிழலில் இடைதேர்த்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

மதுராந்தகத்தில் தவெக - மரகதம் குமரவேல், திமுக - பரந்தாமன், அதிமுக - கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் - சுகந்தி, நாதக - ஜானகிராமன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

மதுராந்தகத்தில் மொத்தம் 48 பேர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் 28 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

Story image

தாராபுரத்தில் தவெக - சத்யபாமா, திமுக - சுகன்யா, அதிமுக - பானுமதி, இந்திய கம்யூ. - லட்சுமணன் , நாதக - கார்த்திகா உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

தாராபுரத்தில் மொத்தம் 51 பேர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் 30 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய இணையதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story image

வருகிற அக். 6 ஆம் தேதி வாக்குப்பதிவும் அக். 9 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.

Summary

How many candidates are contesting the Madurantakam and Dharapuram by-elections

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER