
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் முதல்வர் விஜய் பிரசாரம்? இறுதி வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியீடு
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்களின் பட்டியல் வெளியாவது குறித்து...
முதல்வர் விஜய் - கோப்புப் படம்
மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்களின் பட்டியல் இன்று (செப். 19) வெளியாகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி), திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) ஆகிய 2 தனித் தொகுதிகளுக்கும் வருகிற அக். 6 ஆம் தேதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தொடர்ந்து, அக். 9 ஆம் தேதியில் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும்.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த செப். 9 ஆம் தேதியில் தொடங்கி செப். 16 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதில் மதுராந்தகத்தில் 48 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், முறையான ஆவணங்கள் இல்லாத 20 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 28 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
அதேபோல், தாராபுரத்தில் 51 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 30 மனுக்கள் ஏற்கப்பட்டு, 21 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று முடிந்த நிலையில், மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான அவகாசம் இன்றுடன் (செப். 19) நிறைவடைகிறது. மேலும், இறுதி வேட்பாளர்களின் பட்டியலும் இன்று மாலை வெளியிடப்பட்டு, சின்னமும் ஒதுக்கப்படும்.
இந்த இடைத்தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், நாதக என ஐந்துமுனைப் போட்டி நிலவுகிறது.
இதனிடையே, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளில் தவெக சார்பில் முதல்வர் விஜய் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இம்மாத இறுதியில் மதுராந்தகத்தில் இரு நாள்களும், அக்டோபர் மாத தொடக்கத்தில் தாராபுரத்தில் இரு நாள்களும் முதல்வர் விஜய் பிரசாரம் நடத்தத் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
Summary
List of final candidates contesting the by-elections in Maduranthakam, Dharapuram constituencies to be released today.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







