மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி மாற்றம்!

விருதுநகரில் செப். 17-ஆம் தேதி முதல்வர் சி. ஜோசப் விஜய் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25-க்கு உசிலம்பட்டியில் நடைபெறவுள்ளது.

முதல்வர் சி. ஜோசப் விஜய் - கோப்புப் படம்

Published On :

விருதுநகரில் செப். 17-ஆம் தேதி முதல்வர் சி. ஜோசப் விஜய் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25-க்கு உசிலம்பட்டியில் நடைபெறவுள்ளது.

காமராஜர் காலை உணவுத் திட்டத்தை 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்வதாக அறிவிக்கப்பட்ட நிலையில், காமராஜர் படித்த பள்ளியிலேயே இத்திட்டத்தை தொடக்கி வைக்க முதல்வர் திட்டமிட்டிருந்தார். இதனிடையே இந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடக்கி வைக்கவும், புதிய வசதிகளை ஆய்வு செய்யவும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் விருதுநகர் மாவட்டத்திற்குப் பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.

அரசுப் பள்ளிகளில் பயிலும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த திமுக ஆட்சியில் இத்திட்டம், அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டது.

இதனிடையே புதிதாக பொறுப்பேற்ற முதல்வர் விஜய், முதல்வரின் காலை உணவுத் திட்டம் என்ற பெயரை காமராஜர் காலை உணவுத் திட்டம் என மாற்றி, 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவாக்கம் செய்தார்.

இத்திட்டத்தை பெரியார் பிறந்தநாளான செப். 17 ஆம் தேதி காமராஜர் பயின்ற கேவிஎஸ் நடுநிலைப் பள்ளியில் முதல்வர் விஜய் தொடக்கி வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

முதல்வர் வருகையை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்புப் பணிகள் மற்றும் முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. இந்நிலையில், முதல்வர் விஜய் லண்டன் சென்றுள்ளதால், விருதுநகரில் அவர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Change in event scheduled for Chief Minister in Virudhunagar on Sept. 17!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.