
நடிகை த்ரிஷா பற்றி வெளிப்படையாகப் பேசியிருக்கிறாரா அம்பிகா? என்ன சொன்னார்?
நடிகை த்ரிஷா லண்டனில் இருப்பது பற்றி வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் அம்பிகா...

நடிகை அம்பிகா
முதல்வர் ஜோசப் விஜய் - நடிகை த்ரிஷா இடையேயான நட்பு குறித்து நடிகை அம்பிகா மனம் திறந்து பேசியுள்ளார்.
தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் சென்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய், சில்வர்ஸ்டோன் சர்க்யூட் அரங்கில் நடைபெற்ற கார் பந்தயத்தை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த கார் பந்தயத்தில் நடிகர் அஜித்தும் பங்கேற்றிருந்தார்.
லண்டன் சென்றிருந்த நடிகை த்ரிஷாவும், யாருமே எதிர்பாராத வகையில், கார் பந்தயத்தைக் காண வந்திருந்தார். அவரும் முதல்வர் விஜய்யும் இருக்கும் சில விடியோக்கள் வெளியாகி பேசுபொருளாகியிருந்தது.
ஏற்கனவே, முதல்வர் விஜய் - அவரது மனைவி சங்கீதா விவாகரத்து மனுவில் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. அதற்கு முன்பிருந்தே, த்ரிஷா, தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கங்களில் விஜய்யுடன் வெளிநாடு சென்றிருப்பதை ஊர்ஜிதப்படுத்தும் வகையிலான புகைப்படங்களைப் பதிவேற்றியிருந்ததே குடும்பத்தில் குழப்பம் வரக் காரணம் என்றும் த்ரிஷா மீது நேரடியாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த நிலையில்தான், ஏற்கனவே முதல்வரின் லண்டன் பயணம் சர்ச்சையாக இருந்த நிலையில், அங்கு நடிகை த்ரிஷாவும் சென்று சர்ச்சையை பெரிதாக்கினார்.
அங்கிருந்து வெளியான சில விடியோக்களில், த்ரிஷா, முதல்வர் விஜய் இருக்கும் இடத்துக்கு வந்ததும் அவர் தன்னுடைய முகத்தை மறைப்பது, விஜய் வர வேண்டிய ஒரு இடத்தில் த்ரிஷா காத்திருக்கிறார். ஆனால், விஜய் அங்கு வரவேயில்லை இதுபோன்ற விடியோக்கள் வெளியாகி, த்ரிஷாவுக்கு எதிராக விமர்சனங்கள் எழக் காரணமாகியிருந்தது.
இந்த நிலையில்தான், நடிகை அம்பிகா பொதுவாக பேசியிருப்பதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வெளியாகியிருக்கிறது. இதில், அம்பிகா நேரடியாக யார் பெயரையும் குறிப்பிட்டுப் பேசவில்லை.
அம்பிகா பேசுகையில், நண்பர்களாக இருந்த இரண்டு பேரில், ஒருவர் உயர்ந்த பதவிக்குச் சென்றுவிட்டால், அதற்காகவே அந்த நட்பை நாம் நிராகரித்துவிட முடியாதுதான். ஆனால், அதற்கு வேறு சாயம் பூசக்கூடாது. நானாக இருந்தால் இப்படித்தான் செய்வேன் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் நீ அப்படி செய்யக்கூடாது, செய்வது தவறு என நாம் சொல்ல முடியாது என்று நடிகை அம்பிகா கூறியுள்ளார்.
தொடர்ந்து ஒரு நபருக்கும் எனக்கும் நட்பு இருக்கிறது. அவர் ஒரு நல்ல பதவியில் இருக்கிறார் என்று நினைத்துக் கொள்ளலாம். அவரும் நானும் ஒரே இடத்துக்கு வந்து விட்டோம். ஆனால், ஒன்றாக தோன்றினால் எதிர்மறையான விமர்சனங்கள் வரும் என்று தெரிந்தால், இருவருக்குள் உள்ள நட்பை உண்மையாக மதித்தால், நான் அவருடன் அந்த இடத்துக்குச் செல்ல மாட்டேன். நிச்சயமாக செல்லவே மாட்டேன்.
எதிர்மறை விமர்சனங்கள் வரும் என்றால் நிச்சயம் உடன் செல்வதையே தவிர்த்துவிடுவேன். இது என்னுடைய கருத்து. நட்புக்கு மதிப்பு கொடுத்து நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
எதிர்மறை விமர்சனங்களுக்காக சிலவற்றை தவிர்ப்பது நல்லதுதான், அதே நேரம் அவர்களின் தனிப்பட்ட விவகாரத்தில் நான் தலையிட முடியாது என்று நேரடியாகவே பேசியிருப்பதாகக் கூறப்படுகிறது.
அவர் யார் பெயரையும் குறிப்பிடாவிட்டாலும் தற்போது நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளால் அவர் த்ரிஷாவைத்தான் சொல்கிறார் என்று திரைத்துறை ரசிகர்கள் இந்த பேச்சை வைரலாக்கியிருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





