பினராயி விஜயன் மீது வழக்குப்பதிவு? சட்ட ஆலோசனைக்குப் பின் முடிவு - கேரள முதல்வா்பெட்ரோலுடன் எத்தனால் கலப்பை 20%-க்கு மேல் அதிகரிக்க அரசு முயற்சி- பிரதமரின் ஆலோசகா் தருண் கபூா் 100 டாலரைக் கடந்தது கச்சா எண்ணெய் விலை: எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படும் அபாயம் தமிழகம் உள்பட 5 மாநில பேரவைத் தோ்தல்: பாஜக பெற்ற நன்கொடை ரூ.1,473 கோடி - காங்கிரஸை விட 7 மடங்கு அதிகம் முதல்வா் விஜய் இன்று லண்டன் பயணம்ஈரானின் 5 எண்ணெய் கப்பல்களை மூழ்கடித்தது அமெரிக்கா- பதிலடியாக 20 கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

சுதந்திர நாள் விழாவில் முதல்வர் விஜய்யின் பெற்றோர், த்ரிஷா!

சுதந்திர நாள் விழாவில் முதல்வர் விஜய்யின் பெற்றோர் மற்றும் நடிகை த்ரிஷா கலந்துகொண்டது பற்றி...

CM Vijay parents and Trisha at the Independence Day celebration

சுதந்திர நாள் விழாவில் விஜய்யின் பெற்றோர் மற்றும் நடிகை த்ரிஷா. - X

Published On :

சென்னையில் முதல்வர் விஜய் முதல்முறையாக கொடியேற்றிய சுதந்திர நாள் விழாவில் விஜய்யின் பெற்றோர் மற்றும் நடிகை த்ரிஷா கலந்துகொண்டனர்.

நாட்டின் சுதந்திர நாள் இன்று (ஆக. 15) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் முதல்முறையாக ஆட்சி அமைத்துள்ள தவெக அரசின் முதல் சுதந்திர நாள் கொண்டாட்டம் இன்று நடைபெற்றது.

தமிழக அரசு சார்பில் நிகழும் சுதந்திர நாள் விழாவில் பங்கேற்பதற்காக இன்று காலை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து புறப்பட்ட முதல்வர் விஜய், மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள உழைப்பாளர் சிலை அருகே வந்ததும், காவல்துறையின் மோட்டார் சைக்கிள்கள் அணிவகுப்புடன் கோட்டையை நோக்கி வந்தார்.

அதன்பிறகு, கோட்டையில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட முதல்வர் தொடர்ந்து திறந்த வாகனத்தில் (ஜீப்) சென்று காவல்துறையினரின் அணிவகுப்பை பார்வையிட்டார்.

இதைத் தொடர்ந்து, சரியாக காலை 8.45 மணிக்கு கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து முதல்வர் விஜய் மரியாதை செலுத்தினார். இதன் மூலமாக முதல்முறையாக கோட்டையில் முதல்வர் விஜய் தேசியக்கொடி ஏற்றினார்.

பின்னர் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் விருதுகள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு பதக்கங்களையும் வழங்கினார்.

விழாவில் விஜய்யின் பெற்றோர், த்ரிஷா

முதல்வர் விஜய் கொடியேற்றும் சுதந்திர நாள் விழாவில் விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ. சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர் கலந்துகொண்டனர்.

மேலும் இந்த விழாவில் நடிகை த்ரிஷாவும் கலந்துகொண்டார். விஜய்யின் பெற்றோர் இருக்கைக்கு அருகே அவருக்கும் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது.

அணிவகுப்பில் முதல்வர் விஜய் சல்யூட் அடிக்க, த்ரிஷாவும் அவரைப் பார்த்து சல்யூட் அடித்தார்.

நிகழ்வு முடிந்து விஜய் செல்லும்போது விஜய்யின் பெற்றோர் மற்றும் த்ரிஷா, முதல்வருக்கு கையசைத்து வழியனுப்பி வைத்தனர்.

சுதந்திர நாள் விழாவில் த்ரிஷா கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Summary

CM Vijay parents and Trisha at the Independence Day celebration

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.