FOLLOW US

ON GOOGLE DISCOVER

ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

கோட்டையில் கொடியேற்றினார் முதல்வர் விஜய்!

சுதந்திர நாளையொட்டி, சென்னை புனித ஜாா்ஜ் கோட்டையில் முதல்வர் விஜய் முதல்முறையாக தேசியக் கொடியை ஏற்றிவைத்தது பற்றி...

News image

தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய. - படம் - விடியோ கிளிப்

Updated On :15 ஆகஸ்ட் 2026, 8:53 am IST

சுதந்திர நாளையொட்டி, சென்னை புனித ஜாா்ஜ் கோட்டையில் தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் சனிக்கிழமை (ஆக.15) காலை 8.45 மணியளவில் முதல்முறையாக தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.

தமிழகத்தில், சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று தவெக கூட்டணி ஆட்சி அமைந்து 3 மாதங்களாகும் நிலையில், நாட்டின் 80ஆவது சுதந்திர நாள் சனிக்கிழமை (ஆக.15) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழக அரசு சார்பில் நிகழும் சுதந்திர நாள் விழாவில் பங்கேற்பதற்காக இன்று காலை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து முதல்வர் விஜய் புறப்பட்டார்.

மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள உழைப்பாளர் சிலை அருகே வந்ததும், காவல்துறையின் மோட்டார் சைக்கிள்கள் அணிவகுப்புடன் கோட்டையை நோக்கி முதல்வர் விஜய் வந்தார்.

அதன்பிறகு, கோட்டையில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட முதல்வர் தொடர்ந்து திறந்த வாகனத்தில் (ஜீப்) சென்று காவல்துறையினரின் அணிவகுப்பை பார்வையிட்டார்.

இதைத் தொடர்ந்து, சரியாக காலை 8.45 மணிக்கு கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து முதல்வர் விஜய் மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து சுதந்திர நாள் உரையாற்றவிருக்கும் முதல்வர், தகைசால் தமிழர் விருது, அப்துல் கலாம் விருது, துணிவு மற்றும் சாகசத்துக்கான கல்பனா சாவ்லா விருது, முதல்வரின் நல்ஆளுமை விருது, சமூகநல சேவைக்கான விருது, சிறந்த மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கான விருதுகளை வழங்குகிறார்.

Summary

On the occasion of Independence Day, Tamil Nadu Chief Minister S. Joseph Vijay hoisted the national flag for the first time at Fort St. George in Chennai at around 8:45 AM on Saturday (August 15).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.