கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

திருப்பூர் மாவட்டத்துக்கு என்னென்ன தேவை? தாராபுரத்தில் பட்டியலிட்ட முதல்வர் விஜய்!

தவெக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்தும் திருப்பூர் மாவட்டத்துக்கான திட்டங்கள் குறித்தும் முதல்வர் விஜய் பேசியது தொடர்பாக...

Tiruppur district need Chief Minister Vijay

முதல்வர் விஜய் - படம் - தவெக

Published On :

தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து முதல்வரும் அக்கட்சியின் தலைவருமான விஜய் பிரசாரம் மேற்கொண்டார். நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், சுகாதாரத் துறை அமைச்சர் அருண் ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பிரசார மேடையில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்தும் திருப்பூர் மாவட்டத்துக்கான திட்டங்கள் குறித்தும் முதல்வர் விஜய் பேசினார்.

அவர் பேசியதாவது:

''ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் வரும் பொங்கல் முதல் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது.

முதல்வர் காப்பீட்டுத் தொகை ரூ. 5 லட்சத்தில் இருந்து ரூ. 25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. முதியோர் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அம்மா உணவகங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன.

மகளிர் தொழில் முனைவோருக்காக சிங்கப்பெண் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

பெண்கள்பாதுகாப்பை உறுதிப்படுத்த சிறப்புப் படை அமைக்கப்பட்டு புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆட்சிக்கு வந்ததும் ஊழல், லஞ்சமற்ற நிர்வாகத்தை முழு முனைப்போடு செய்து வருகிறோம். 100 நாள்களில் ரூ. 1 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது.

நெல், பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 200 யூனிட் மின்சாரம் வழங்கப்படுகிறது. தாய்மாமன் திட்டத்தில் மோதிரம் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம்.

திருப்பூரில் உயிரியல் பாதுகாப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது. திருப்பூரில் பல்வேறு அடிப்படை கட்டமைப்புகள் நிறைவேற்றப்படவில்லை என்பது கவனத்துக்கு வந்துள்ளது.

இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படாமல் உள்ளது. கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. பாசன நீர் கிடைக்காமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். பொருளாதாரத்தில் தாராபுரம் பின் தங்கியுள்ளது.

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் கட்டடம் என ரூ. 72 கோடியில் அமைக்க நடவடிக்கை'' என முதல்வர் விஜய் பேசினார்.

Summary

What does Tiruppur district need Chief Minister Vijay lists the requirements in Dharapuram

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.