பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்தேர்தல் ஆணையம் நோக்கி அக். 6 பேரணி! போராட்டங்களை அறிவித்த இந்தியா கூட்டணி!ரூ. 100 கோடி மோசடி வழக்கு: அன்பில் மகேஸுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க முடியாது! உயர் நீதிமன்றம்தவெகவில் இணைகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை!தில்லியில் இந்தியா கூட்டணிக் கூட்டம் தொடங்கியது! 19 கட்சிகள் பங்கேற்பு!துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையரில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்முன்னாள் அமைச்சர் ரகுபதிக்கு எதிரான தேர்தல் வழக்கு நிராகரிப்பு!முதல்வா் விஜய் வருகையால் கோவையில் இன்று போக்குவரத்து மாற்றம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஇரு நாள்களில் 5,000 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்புற்றுநோய் மருந்துகளை 10 மடங்கு அதிக விலைக்கு விற்பது படுகொலைக்குச் சமம்: உச்சநீதிமன்றம்

இடைத்தேர்தலில் கூட்டணி! மதுராந்தகம் திமுகவுக்கு, தாராபுரம் அதிமுகவுக்கு: அருண்ராஜ்

இடைத்தேர்தலில் திமுக - அதிமுக கூட்டணி வைத்துள்ளதாக அமைச்சர் அருண் ராஜ் பேசியுள்ளது குறித்து...

Alliance for the by-election! Maduranthakam for DMK, Dharapuram for AIADMK: Arun Raj

அருண்ராஜ் - எக்ஸ்

Published On :

இடைத்தேர்தலில் திமுக - அதிமுக கூட்டணி வைத்துள்ளதாக அமைச்சர் அருண் ராஜ் இன்று (செப். 30) தெரிவித்தார்.

மதுராந்தகம் தொகுதி திமுகவுக்கு, தாராபுரம் தொகுதி அதிமுகவுக்கு என இருவரும் பங்குபோட்டுக்கொண்டதாகவும், அதனால்தான் தாராபுரத்தில் செந்தில் பாலாஜி பிரசாரம் செய்யவில்லை எனவும் குறிப்பிட்டார்.

தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து முதல்வரும் அக்கட்சியின் தலைவருமான விஜய் பிரசாரம் மேற்கொண்டார். நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், சுகாதாரத் துறை அமைச்சர் அருண் ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பிரசார மேடையில் அமைச்சர் அருண் ராஜ் பேசியதாவது:

''திரும்பவும் தமிழக மக்களை ஏமாற்றி தொழில் செய்ய முடியுமா? இல்லை வெளிநாட்டில் ஏதாவது முதலீடு செய்துகொண்டு சென்றுவிடமாலா? என்று எதிர்க்கட்சிகள் ஜோசியம் பார்க்கத் தொடங்கிவிட்டனர்.

என்றுமே எதிர்க்கட்சி வரிசையில்தான் அவர்கள் (திமுக) இருக்க வேண்டும். தமிழக மக்கள் பகுத்தறிவோடு சிந்தித்து வாக்களித்துள்ளனர்.

கொங்கு மண்டலத்தின் 61 இடங்களில் 28 இடங்களில் வெற்றி பெற்று தவெகவின் கோட்டையாக கொங்கு மண்டலம் மாறியுள்ளது. இதனைச் செய்துகாட்டிய மக்களுக்கு சல்யூட்.

கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவன் என்று கூறிக்கொண்டு ஒரு தலைவர் குறுக்கு வழியில் சென்றுக்கொண்டிருக்கிறார். பதவி மட்டுமே முக்கியம் என்று எம்ஜிஆர் வழியில் இருந்து மாறி, செய்யக்கூடாத செயல்களை எல்லாம் செய்துகொண்டு இருக்கிறார்.

திமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என கொங்கு மக்கள் எடப்பாடி பழனிசாமியிடம் சத்தியம் வாங்க வேண்டும். ஓபிஎஸ்ஸை கட்சியில் இருந்து நீக்கியது ஏன்? திமுகவுடன் உறவு வைத்துக்கொண்டதால் தானே. நீங்கள் திமுகவுடன் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று கூற முடியுமா?

திமுக - அதிமுக கூட்டணி சேர்வது எதற்காக என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். திரும்ப ஆட்சிக்குவர முடியாது என்பதால், அவர்கள் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

இடைத்தேர்தலிலும் அதிமுக - திமுக கூட்டணி வைத்துள்ளது என்பதை சான்றுடனே கூறுகிறேன். மதுராந்தகம் தொகுதி திமுகவுக்கு, தாராபுரம் தொகுதி அதிமுகவுக்கு என அவர்கள் பங்குபோட்டுக்கொண்டனர்.

ஊழல் இல்லாத ஆட்சியை நம் முதல்வர் கொடுத்துக்கொண்டு இருக்கிறார். மாநில உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் ஒரே இயக்கம் தவெக. எஸ்.ஐ.ஆர்-ஐ பொறுத்தவரை அதனை எதிர்ப்பதுதான் தவெக நிலைப்பாடு. தேர்தல் ஆணையர்கள் ஒருமித்த கருத்து அடிப்படையில்தான் நியமிக்கப்பட வேண்டும் என்பதே நம் இயக்கத்தின் நிலைப்பாடு.

இளைஞர்கள் சட்டப்பேரவை நிகழ்வுகளைப் பார்க்கத் தொடங்கியுள்ளனர். இந்த மாற்றம் தவெகவால் நிகழ்ந்தது.

இது சாதாரண இடைத்தேர்தல் அல்ல. நேர்மைக்கும் ஊழலுக்கும் இடையிலான போர். இந்த தேர்தலில் தவெக வெற்றி பெறுவதன் மூலம் தாராபுரம் வெற்றி பெறும்.'' எனக் குறிப்பிட்டார்.

Summary

Alliance for the by-election! Maduranthakam for DMK, Dharapuram for AIADMK: Arun Raj

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.