
தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!
அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை தவெகவில் இணைந்தது குறித்து...

செம்மலைக்கு கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்! - படம்: விடியோ கிளிப்
தமிழ்நாடு முதல்வர் விஜய் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை இன்று(செப். 30) தவெகவில் இணைந்தார்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்துக்காக வருகை வந்த முதல்வர் விஜய் முன்னிலையில், தவெகவில் தன்னை இணைத்துக்கொண்டார் முன்னாள் அமைச்சர் செம்மலை.
பிரசார திடலுக்கு வந்த முதல்வர் விஜய்யை செம்மலை வரவேற்றார். இதனைத் தொடர்ந்து, செம்மலைக்கு விஜய் தவெக கட்சித் துண்டை அணிவித்தார்.
அதிமுக இரண்டாக பிளவுபட்டபோது, அதிமுகவில் நடக்கும் தொடர் நிகழ்வுகள் தனக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியதாகக் கூறி அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை இன்று(செப். 30) தவெகவில் இணைந்துள்ளார்.
தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளா் சத்தியபாமாவை ஆதரித்து முதல்வா் ச. ஜோசப் விஜய் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இதையடுத்து பொதுக்கூட்ட திடல் மற்றும் தாராபுரம் பகுதியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். பொதுக்கூட்ட திடலை முழுமையாக போலீஸார் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர்.
கடைசி வரிசையில் உள்ளவர்களும் முதல்வரை எளிதாக பாா்க்கும் வகையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
Summary
Former AIADMK Minister Semmalai joined TVK today (Sept. 30) in the presence of Tamil Nadu Chief Minister Vijay.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






