
தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்கு பொறுப்பு!
அதிமுகவில் இருந்து தவெகவிற்கு சென்ற 11 முன்னாள் அமைச்சர்களுக்கு துணை பொதுச்செயலர் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது பற்றி...

தவெக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலா் என்.ஆனந்த், அமைச்சா்கள் ஆதவ் அா்ஜுனா, வெங்கட்ரமணன் உள்ளிட்டோா் முன்னிலையில் தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சா்கள் கடம்பூா் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி.சம்பத், எம்.ஆா்.சிவபதி உள்ளிட்டோா். - கோப்புப்படம்.
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தவர்களுக்கு பொறுப்புகளை வழங்கி கட்சித் தலைவரும் முதல்வருமான விஜய் அறிவித்துள்ளார்.
இதன்படி, அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் 11 பேர் உள்பட 15 பேருக்கு துணைப் பொதுச்செயலர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. வெல்லமண்டி நடராஜன், கடம்பூர் ராஜூ, எஸ். வளர்மதி ஆகியோருக்கு துணைப் பொதுச்செயலர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் எம்.சி. சம்பத், ராதாகிருஷ்ணன், சிவபதி, வைகைச்செல்வன் ஆகியோருக்கும் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதோடு மடத்துக்குளம் சட்டப்பேரவைத் தொகுதியை உள்ளடக்கிய திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டக் கழகம் புதிதாக உருவாக்கி அதன் செயலாளராக முன்னாள் எம்.பி. மற்றும் எம்எல்ஏவுமான சி மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதியதாக நியமிக்கப்பட்டுள்ள அனைத்து நிர்வாகிகளும், கட்சித் தலைவர் விஜயின் உத்தரவு மற்றும் ஆலோசனையின்படியும், பொதுச்செயலர் என். ஆனந்தின் வழிகாட்டுதலின்படியும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுடன் இணைந்து தங்களது பணிகளை மேற்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு கட்சித் தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Summary
Party leader and Chief Minister Vijay has announced the allocation of responsibilities to those who left AIADMK and joined TVK.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





