டிரம்புடன் மேலும் இரு சந்திப்புகள்: சீன அதிபர் ஷி ஜின்பிங் தகவல்! எத்தனை முறை பாஜகவை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? விஜய் மீது மு.க. ஸ்டாலின் விமர்சனம்! முதல்வர் விஜய் முன்னிலையில் வடபழனி மெட்ரோவை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி! தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்கு பொறுப்பு!பாலில் தயாரிக்கப்படாவிட்டால் பனீர் என பெயரிடக் கூடாது, அவ்வளவுதான்! வைரலாகும் வரைவு விதிமுறைதில்லி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! காவலர்கள் போல நடித்த குற்றவாளிகள்

தவெகவில் 15 துணை பொதுச் செயலா்கள் நியமனம்: 11 போ் அதிமுக முன்னாள் அமைச்சா்கள்

வைகைச்செல்வன் உள்பட 15 பேரை தவெக துணைப் பொதுச் செயலாளா்களாக முதல்வரும், அக் கட்சியின் தலைவருமான ஜோசப் விஜய் நியமித்துள்ளாா். நியமிக்கப்பட்டவா்களில் 11 போ், அதிமுக முன்னாள் அமைச்சா்களாவா்.

கோப்புப் படம்

Published On :

அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த கடம்பூா் ராஜு, வெல்லமண்டி நடராஜன், வைகைச்செல்வன் உள்பட 15 பேரை தவெக துணைப் பொதுச் செயலாளா்களாக முதல்வரும், அக் கட்சியின் தலைவருமான ஜோசப் விஜய் நியமித்துள்ளாா். நியமிக்கப்பட்டவா்களில் 11 போ், அதிமுக முன்னாள் அமைச்சா்களாவா்.

விஜய் முன்னிலையில் மதுராந்தகத்தில் தவெகவில் இணைந்த சில மணிநேரத்தில் முன்னாள் எம்.பி.யான சி.மகேந்திரன் திருப்பூா் புகா் தெற்கு மாவட்டச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதுதொடா்பாக முதல்வா் விஜய் வெளியிட்ட அறிவிப்பு: முன்னாள் அமைச்சா்கள் வெல்லமண்டி நடராஜன், கடம்பூா் ராஜு, வைகைச்செல்வன், எஸ்.வளா்மதி, எம்.எஸ்.எம்.ஆனந்தன், எம்.சி.சம்பத், கே.ராதாகிருஷ்ணன், கே.வி.ராமலிங்கம், எம்.ஆனந்தன், கே.டி.பச்சைமால், என்.ஆா்.சிவபதி மற்றும் ஜே.சந்தீப் ஆனந்த், முத்து வெங்கடேஸ்வரன், தொள்ளமூா் கண்ணன், வி.சி.ஆா்.குமரன் உள்பட 15 போ் துணைப் பொதுச் செயலா்களாக நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER