
தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம்: கோவையில் முதல்வர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு!
கோவை விமான நிலையத்தில் முதல்வர் விஜய்க்கு வரவேற்பு அளித்த தவெகவினர்.

கோவை விமான நிலையத்தில் முதல்வர் விஜய்க்கு வரவேற்பு அளித்த தவெகவினர். - படம்: தினமணி
தாராபுரம் இடைத்தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ள கோவை வந்த தமிழக முதல்வர் விஜய்க்கு தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ளவும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவும் தமிழக முதல்வர் விஜய், முதல்வரான பிறகு முதல்முறையாக சென்னையில் இருந்து தனி விமான மூலம் கோவை வந்தடைந்தார்.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளிடம் சில நிமிடம் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு, திடீரென்று சாலையில் சிறு தூரம் நடந்து சென்று, பிரசார வாகனத்தில் ஏறி சென்றார்.
சாலையில் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, தொண்டர்கள் சாலையின் குறுக்கே வராதவாறு போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை விமான நிலையத்தில் இருந்து சின்னியம்பாளையம், நீலாம்பூர், கணியூர், கருமத்தம்பட்டி, சோமனூர், காரணம்பேட்டை, பல்லடம் வழியாக திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பொதுக்கூட்டம் நடக்கும் இடத்திற்கு செல்கிறார்.
கோவை மட்டும் இல்லாமல் கொங்கு மண்டலத்தில் இருந்து வந்த மக்கள், முதல்வர் விஜய்யை பார்ப்பதற்கு ஆர்வமாக காலை முதலே கடும் வெய்யிலைகூட பொருட்படுத்தாமல் நின்று கொண்டிருந்தனர்.
பொதுக்கூட்டத்தை முடித்துவிட்டு இரவு 7 மணிக்கு மீண்டும் தனி விமான மூலமாக சென்னை செல்வதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Summary
Cadres of the Tamizhaga Vettri Kazhagam and the general public accorded an enthusiastic welcome to Tamil Nadu Chief Minister Vijay upon his arrival in Coimbatore to campaign for the Dharapuram by-election.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






