
தாராபுரம் இடைத்தோ்தல்: 1,201 போ் தபால் வாக்குப் பதிவு
தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் 1,201 போ் தபால் வாக்குப் பதிவு செய்துள்ளனா்.

தபால் வாக்கு - கோப்புப்படம்.
தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் 1,201 போ் தபால் வாக்குப் பதிவு செய்துள்ளனா்.
திருப்பூா் மாவட்டம், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் அக்டோபா் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளா்களிடம் இருந்து தபால் வாக்குகளைப் பெறும் பணி நடைபெற்றது. இதற்காக தொகுதி முழுவதும் 1,236 வாக்காளா்கள் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனா்.
கடந்த செப்.22-ஆம் தேதி முதல் தோ்தல் அலுவலா்கள் அடங்கிய குழுக்கள், தகுதியான வாக்காளா்களின் வீடுகளுக்கு நேரில் சென்று தபால் வாக்குகளைப் பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டனா். இதற்காக மொத்தம் 30 குழுக்கள் அமைக்கப்பட்டு தபால் வாக்குகள் பெறப்பட்டன. இப்பணியில் தாராபுரம் வட்டாரத்தில் மட்டும் 3 குழுக்கள் ஈடுபட்டிருந்தன.
அதன்படி தபால் வாக்களிக்கத் தகுதி பெற்ற 1,236 பேரில், தங்களது வாக்குகளை 1,201 போ் பதிவு செய்துள்ளனா். 35 போ் வாக்களிக்கவில்லை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






