
ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சு!
முதல்வர் விஜய்க்கு எதிராகப் பேசியதாக கருதிக்கொண்டு தவெகவினர் விஜய் சேதுபதியை விமர்சித்து வருவது கண்டனத்துக்குரியது...

சீமான் / விஜய் சேதுபதி - எக்ஸ்
முதல்வர் விஜய்க்கு எதிராகப் பேசியதாக கருதிக்கொண்டு தவெகவினர் விஜய் சேதுபதியை விமர்சித்து வருவது கண்டனத்துக்குரியது என நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (செப். 15) தெரிவித்தார்.
இது தொடர்பாக மதுரையில் சீமான் பேசியதாவது:
''முதல்வர் விஜய்க்கு எதிராகப் பேசியதாகத் தாங்களாகவே பொருள் கற்பித்துக்கொண்டு, தவெகவினர் விஜய் சேதுபதியை மிகக் கடுமையாக விமர்சித்தும் இழிவுபடுத்தியும் வருவது கடும் கண்டனத்துக்குரியது.
தம்பி விஜய் சேதுபதி யாருடைய பெயரையும் குறிப்பிட்டுப் பேசவில்லை. எந்தவொரு அரசியல் கட்சியையும் சுட்டிக்காட்டவில்லை. ஒரு விளையாட்டில் உருவான சூழலை வைத்து உருவான கருத்தை, தங்கள் தலைவரோடு பொருத்திக்கொண்டு கருத்து கூறியவரை விமர்சிப்பது ஏன்?
தனக்குப் பிடித்த கருத்தை மட்டுமே மற்றவர்கள் பேச வேண்டும் என நினைப்பது ஜனநாயகம் அல்ல. தனக்கு எதிரான கருத்தையும் பேச அனுமதித்து, அதற்கு கருத்தால் பதில் சொல்வதுதான் ஜனநாயகம்.
ஜனநாயகன் என்று படம் எடுத்தால் மட்டும் போதாது. உண்மையான ஜனநாயகத்தைப் போற்றி அதன் மாண்புகளைக் காக்க வேண்டும்.
கருத்தைக் கருத்தால் மட்டுமே எதிர்கொள்ள வேண்டும். கேள்விக்குப் பதிலால் எதிர்வினையாற்ற வேண்டும். வசையாலும் மிரட்டலாலும் கருத்துரிமையை முடக்கக் கூடாது'' எனக் குறிப்பிட்டார்.
Summary
Seeman speaks in support of Vijay Sethupathi over leader controversy
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






