கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை: 2 பேர் மிக அருகிலிருந்து சுடப்பட்டனர்! - உடற்கூராய்வு அறிக்கை! நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்புநேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: 9 பேர் பலி; 105 இந்தியர்களின் நிலை?சென்னை மாநகராட்சி: கனமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்! ஆக. 28-ல் மேட்டூர் அணை திறப்பு! முதல்வர் விஜய் வருகிறார்! ஏற்பாடுகள் முனைப்பு!13 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு! ‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிதமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? விவரங்கள் வெளியானது

நேபாள வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கும் பகுதியில் சிக்கியுள்ள 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன என்பது குறித்து..

நேபாள வெள்ளப்பெருக்கு

நேபாள வெள்ளப்பெருக்கு - AP

Published On :26 ஆகஸ்ட் 2026, 4:51 pm IST

நேபாளத்தின் வடக்கு ராசுவா பகுதியில் இன்று காலை கோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் தமிழ்நாட்டின் கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 36 பெண்கள் உள்பட 57 பேர் சிக்கித் தவித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேபாளம் சென்றிருந்த 57 பேரில், 17 பேர் கொண்ட ஒரு குழு, தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக ஆடியோ மூலம் தகவல் வெளியிட்டிருக்கிறார்கள். மற்றவர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவே முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் ஒரு பேருந்து வெள்ளத்தில் சிக்கியிருக்கலாம் என்றும் உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழர்கள் உள்பட சுமார் 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நேபாளத்தில் சிக்கித் தவிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலை பற்றி அறிந்து கொள்ள 1800 309 3793 என்ற இலவச தொடர்பு எண் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 80690 09901 மற்றும் 080690 09900 என்ற எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

நேபாள வெள்ளத்தில் ஏற்பட்ட பாதிப்பினால், ரசுவா பகுதிக்கு அருகே தாங்கள் தங்கியிருக்கும் பகுதியிலிருந்து வெளியே வர முடியாமல் தமிழர்கள் தவிப்பதாகவும், ஆனால், அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் முதற்கட்ட தகவல்கள் கிடைத்துள்ளன.

தமிழர்கள் அனைவரும் தற்போது நேபாள ஆயுதப் படைக்குச் சொந்தமான இடங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும், அயலக தமிழர்கள் நலத் துறை சார்பில் விரைவில் அவர்களின் நிலை, அவர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் இடம், முகவரி உள்ளிட்டவை விரைவில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், தமிழகர்கள் 57 பேரும் தொடர்பு கொள்ளக்கூடிய நிலையில்தான் இருக்கிறார்கள் என்று மட்டும் தகவல்கள் வந்துள்ளன.

மேலும், நேபாளம் சென்ற தமிழர்களின் பெயர் பட்டியலும் வெளியாகியிருக்கிறது. அதில், கும்பகோணத்தைச் சேர்ந்த சுற்றுலா ஏஜென்சி, 57 பேரை ஆன்மிக சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளது.

இதில் திருச்சி, தஞ்சையைச் சேர்ந்த தலா 5 பேர், கும்பகோணம் - 17 பேர், கடலூர் - 12 பேர், மயிலாடுதுறை - 7 பேர், ஒசூர்- 2, சூளகிரி 2 பேர், புதுச்சேரி - 3 பேர் என 57 பேர் திருக்கயிலாய மானசரோவர் யாத்திரை சென்றபோது நேபாளத்தில் சிக்கியுள்ளனர்.

இந்தக் குழுவினர் இன்று காலை திபெத்தில் கைரோங் செல்லவிருந்த நிலையில், அங்கு வெள்ளப்பெருக்கு நேரிட்டுள்ளளது. ஆனால், அவர்கள் இருந்த இடத்தில் வெள்ள பாதிப்பு ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.