விசிக கூட்டணியைத் தக்கவைத்த திமுக விரும்பவில்லை: திருமாவளவன்எரிபொருள் போர்நிறுத்தம் அறிவிப்பு: உக்ரைன் - ரஷியா மீற வேண்டாம்! டிரம்ப் எச்சரிக்கைஎங்கள் செல்போன்களை பறித்தது காவல் துறை; ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் - சிஜேபி செளரவ் தாஸ்தில்லியில் தொடரும் சிஜேபி போராட்டம்: எம்பி ஜான் பிரிட்டாஸ் உட்பட 100 பேர் கைது! நாளை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! நாட்டில் 1300க்கும் அதிகமான பல்கலை., 5000க்கும் அதிகமான கல்லூரிகள்: பிரதமர் மோடிமத்திய - மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய்கருணாநிதி, ஜெயலலிதா முதல் விஜய் வரை... தமிழ்நாட்டோடு தொடரும் பயணம்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி உரை! 1.5 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சியை நோக்கி தமிழக அரசு செயல்படுகிறது: முதல்வர் விஜய்அமைதியான முறையில் கூடுபவர்களுக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கை கூடாது: உச்ச நீதிமன்றம்சென்னை ஐஐடி ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய் சாமி தரிசனம்! குழந்தைகள் நாள்: பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்க ஏற்பாடு!சௌதி அரேபிய விமான நிலையம் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்

பெரு வெள்ளம்: 300க்கும் மேற்பட்ட இந்தியர்களை காணவில்லை- நேபாள அரசு!

நேபாள பெரு வெள்ளத்தில் சிக்கிய 300க்கும் மேற்பட்ட இந்தியர்களை காணவில்லை என அந்நாட்டு அரசு அறிவிப்பு

நேபாள வெள்ளம்.

நேபாள வெள்ளம்.

Published On :

நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் போடே கோஷி ஆற்றில் ஏற்பட்ட பெரு வெள்ள சம்பவத்துக்குப் பின் 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் காணவில்லை என்று நேபாள அரசு அறிவித்துள்ளது.

நேபாளத்தில் தங்கியிருந்தவர்கள், சுற்றுலா வந்தவர்கள் என 300க்கும் மேற்பட்ட இந்தியர்களை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும், காணாமல் போன 300 பேரை தொடர்பு கொள்ள தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று நேபாள அரசு அறிவித்துள்ளது.

நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் ஓடிக் கொண்டிருக்கும் போடே கோஷி ஆற்றில் புதன்கிழமை காலை 9 மணியளவில் திபெத் பகுதியில் இருந்து திடீரென வெள்ளம் கீழ்நோக்கி பல அடி உயரத்துக்கு கரைபுரண்டு வந்தது. இதில் கோஷி ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த பாலங்கள், ஆற்றங்கரையோரம் இருந்த கட்டடங்கள், நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான வாகனங்கள் உள்ளிட்டவை அடித்துச் செல்லப்பட்டன.

நேபாளத்தில் திபெத்தையொட்டி இருக்கும் ஆற்றில் ஏற்பட்ட திடீா் வெள்ளப் பெருக்கில் சிக்கி 100 போ் உயிரிழந்தனா். மேலும், 133 இந்தியா்கள் உள்பட சுமாா் 750 பேரைக் காணவில்லை என்று நேற்று தகவல்கள் வெளியாகின. காணாமல் போன இந்தியா்களில் தமிழகம், புதுவையிலிருந்து சென்ற 37 பேரும் அடங்குவா்.

இந்த நிலையில்தான், போடே கோஷி ஆற்றில் வெள்ள நிகழ்வுக்குப் பிறகு இந்தியர்கள் 300க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக நேபாள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நேபாளத்தில் போடே கோஷி ஆற்றின் ருத்ரதாண்டவத்தில் ரசுவா, நுவாகாட், தாடிங் உள்ளிட்ட 7 மாவட்டங்கள் அடையாளம் தெரியாமல் உருகுலைந்து போயிருக்கிறது.

வெள்ளத்தால் நுவாகோட்டில் பெத்ராவாடியுடன் இணைக்கும் முக்கியமான 42 கி.மீ. தொலைவுள்ள சாலை அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. அதேபோல் பல இடங்களில் கான்கிரீட் பாலங்களும் அடித்துச் செல்லப்பட்டுவிட்டதால், சுற்றுலா பயணிகள் தங்கியிருந்த இடங்களை தொடர்புகொள்ள முடியவிலலை என நேபாள சாலைகள் துறையின் துணை பொது இயக்குநா் மற்றும் செய்தித் தொடா்பாளா் தெரிவித்ததாகக் கூறப்பட்டுள்ளது.

Summary

Massive Floods: Over 300 Indians Missing Nepal Govt

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.