நேபாளத்தில் தமிழர்கள்: 4 அமைச்சர்கள் தில்லி செல்கின்றனர்!நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள்: ஐஏஎஸ் அதிகாரிகள் குழு நேபாளம் செல்ல முதல்வர் உத்தரவு!நேபாள பெரு வெள்ளம்: 300க்கும் மேற்பட்ட இந்தியர்களை காணவில்லை!தேர்தல் வழக்குகள்! நிராகரிக்கக் கோரி முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மனு தாக்கல்!ஈஷா மூலம் நேபாளம் சென்ற 80 பேர் மாயம்! ஜக்கி வாசுதேவ் கண்ணீர்!தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை வேண்டும்! முதல்வர் விஜய்க்கு பெ. சண்முகம் கடிதம்!தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலை? இன்றைய நிலவரம்!சீன நாள்காட்டியால்.. தமிழர்களின் நேபாள பயண திட்டம் மாறியதா? தில்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு கெடு விதித்த கரப்பான்பூச்சி மக்கள் கட்சி! காரணம் என்ன?ஒருநாள் விடுமுறைக்குப் பின் மீண்டும் கூடியது பேரவை! செங்கல்பட்டிலிருந்து சென்னை வர 3 மணி நேரம் ஆகிறது: ஆதவ் அர்ஜுனாகுழந்தைகள், முதியோரிடையே அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு: தடுப்பூசி செலுத்த மருத்துவா்கள் அறிவுறுத்தல்

நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள்: ஐஏஎஸ் அதிகாரிகள் நேபாளம் செல்ல உத்தரவு! தில்லி செல்லும் அமைச்சர்கள்!

நேபாளத்தில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்பது குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை...

cm vijay meeting with officials regarding nepal flood

முதல்வர் விஜய் ஆலோசனை - DIPR

Published On :27 ஆகஸ்ட் 2026, 2:21 pm IST

நேபாள நாட்டில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் 100க்கும் மேற்பட்ட தமிழர்கள் சிக்கியுள்ளதையடுத்து மீட்புப் பணிகள் குறித்து முதல்வர் விஜய் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திபெத் எல்லையையொட்டி நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் போடே கோஷி ஆற்றில் புதன்கிழமை ஏற்பட்ட வெள்ளம் அந்த நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது மிகவும் மோசமான பேரிடர் என்றும் பாதிப்புகள் அதிகமிருக்கும் என்று அந்த நாட்டு அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த வெள்ளப் பெருக்கில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 165 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 300 இந்தியா்கள் உள்பட 580 வெளிநாட்டினர் என மொத்தம் சுமாா் 800க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்று நேபாள அரசு தகவல் தெரிவித்துள்ளது. காணாமல் போனவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் கும்பகோணத்தில் இருந்து சென்ற 54 பேரில் 20 பேர் பாதுகாப்பாக இருப்பதாகவும் மேலும் 34 பேரின் தகவல் குறித்து தெரியவில்லை என்றும் மேலும் சென்னையில் இருந்து சென்ற மற்றொரு 49 பேர் கொண்ட குழு விவரங்களையும் சேகரித்து வருவதாகவும் பேரவையில் இன்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் இதுதொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பது குறித்து இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி கேட்டறிந்து வருகிறார். மேலும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதில் துறைசார்ந்த அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையிலான குழு நேபாளம் செல்ல முடிவெடுக்கப்பட்டுள்ளது. தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல ஆணையர் ஆஷிஷ் குமார் தலைமயிலான குழு நேபாளம் செல்கிறது.

அதேபோல ராஜ்மோகன், ஆதவ் அர்ஜுனா, வினோத், தென்னரசு ஆகிய 4 அமைச்சர்கள் தில்லி சென்று மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்குமாறும் முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

முதல்வர் ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (27.8.2026) தலைமைச் செயலகத்தில், நேபாள நாட்டின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போடே கோசி ஆற்றில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தின் காரணமாக, அந்நாட்டிற்கு சுற்றுலா சென்று  அங்கு சிக்கியுள்ள தமிழர்களை மீட்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நேபாள நாட்டிற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த 103 நபர்கள் கைலாஷ் யாத்திரைக்காக இரண்டு குழுக்களாகச் சென்றுள்ளனர். அதில் முதல் குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 54 நபர்களும், புதுச்சேரியைச் சேர்ந்த 3 நபர்களும் என மொத்தம் 57 நபர்களும் இரண்டாவது குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 49 நபர்களும் இடம்பெற்றிருந்தனர்.

இந்நிலையில், நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் தமிழர்கள் உட்பட பலர் காணாமல்  போனதாகக் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், அங்கு சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவிடும் வகையிலும், தமிழ்நாட்டில் உள்ள அவர்களது உறவினர்கள் தொடர்பு கொள்ள ஏதுவாகவும்  அவசர தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டன.

மேலும், இப்பேரிடரில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மத்திய அரசின் வெளியுறவுத்துறை, நேபாள நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம், புதுதில்லியிலுள்ள தமிழ்நாடு இல்ல அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பயண முகவர் நிறுவனங்களின் (Travel Agencies) உதவியுடன் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  

இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில்,  முதல்வர், தமிழர்களை மீட்கும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தும் வகையில், புதுதில்லி  தமிழ்நாடு இல்ல உள்ளுறை ஆணையர் ஆஷிஷ் குமார், இ.ஆ.ப. தலைமையிலான குழுவினர் நேபாள நாட்டிற்கு நேரில் சென்று மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்திட உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மீட்கப்பட்டுள்ள  20 தமிழர்களை உடனடியாக தாயகம் அழைத்து வருவதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்திடவும், மேலும் தொடர்பு கொள்ள இயலாதவர்களின் நிலையினைக் கண்டறிந்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்திடவும், தேவையான மருத்துவ உதவிகளை வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.  

பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன், வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் க. தென்னரசு, மாண்புமிகு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத் மற்றும் அயலகத் தமிழர்நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை இயக்குநர் ரெ. சதீஸ், இ.ஆ.ப. ஆகியோர் புதுதில்லியிலுள்ள தமிழ்நாடு இல்லத்தில் முகாமிட்டு, மீட்புப் பணிகள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதுடன், நேபாளத்திலிருந்து மீட்கப்பட்ட தமிழர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் மற்றும் உளவியல் ஆலோசனைகளை மருத்துவக் குழுவினர் மூலம் வழங்கிடவும், அவர்களைப் பத்திரமாக தமிழ்நாட்டிற்கு அழைத்து வருவதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.    

இக்கூட்டத்தில், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், தென்னரசு, வினோத், தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

புதுதில்லியிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக தமிழ்நாடு அரசின் புதுதில்லி சிறப்புப் பிரதிநிதி திரு.கே. வெங்கட நாராயணா மற்றும் தலைமை உள்ளுறை ஆணையர் திருமதி ஆர். ஜெயா, இ.ஆ.ப. ஆகியோர் கலந்து கொண்டனர்.

Summary

CM vijay meeting with officials reg nepal flood,

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.