தில்லியில் தொடரும் சிஜேபி போராட்டம்: எம்பி ஜான் பிரிட்டாஸ் உட்பட 100 பேர் கைது! நாளை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! நாட்டில் 1300க்கும் அதிகமான பல்கலை., 5000க்கும் அதிகமான கல்லூரிகள்: பிரதமர் மோடிமத்திய - மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய்கருணாநிதி, ஜெயலலிதா முதல் விஜய் வரை... தமிழ்நாட்டோடு தொடரும் பயணம்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி உரை! 1.5 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சியை நோக்கி தமிழக அரசு செயல்படுகிறது: முதல்வர் விஜய்அமைதியான முறையில் கூடுபவர்களுக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கை கூடாது: உச்ச நீதிமன்றம்சென்னை ஐஐடி ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய் சாமி தரிசனம்! குழந்தைகள் நாள்: பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்க ஏற்பாடு!சௌதி அரேபிய விமான நிலையம் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்

நேபாளத்திற்கு ஆன்மிக சுற்றுலா சென்ற‌ ஈரோடு தம்பதி! தொடர்புகொள்ள முடியாமல் உறவினர்கள் தவிப்பு!

நேபாளத்திற்கு ஆன்மிக சுற்றுலா சென்ற‌ ஈரோடு தம்பதியை தொடர்புகொள்ள முடியாமல் உறவினர்கள் தவிப்பு...

Erode couple on a spiritual tour to Nepal, they are unable to make contact

நேபாளம் சென்ற ஈரோடு தம்பதி நடராஜன் - கிருஷ்ணவேணி - DIN

Published On :

ஈரோடு: நேபாளத்திற்கு ஆன்மிக பயணம் சென்ற ஈரோட்டை சேர்ந்த தம்பதியைத் தொடர்புகொள்ள முடியாத உறவினர்கள் மத்திய, மாநில அரசுகள் இருவரையும் பத்திரமாக மீட்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் கனகபுரத்தைச் சேர்ந்த தம்பதியினர் நடராஜன் (67) மற்றும் அவரது மனைவி கிருஷ்ணவேணி (56) ஆகியோர் கயிலாய மலைக்கு ஆன்மிக பயணம் மேற்கொள்வதற்காகக் கடந்த 14 -ம் தேதி ஈரோட்டிலிருந்து புறப்பட்டுள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த ஒரு தனியார் சுற்றுலா நிறுவனம் மூலம் உறவினர்களுடன் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை நடராஜன் - கிருஷ்ணவேணி தம்பதியர் தங்களது மகன் கவின்ராஜிடம் தொலைபேசியில் பேசியுள்ளனர். ஆனால் அதன் பிறகு நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக அவர்களைத் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மகனின் தொடர் முயற்சிகளுக்கும் பலன் கிடைக்காததால்,பெற்றாரின் நிலை குறித்துத் தெரியாமல் உறவினர்களும் மிகுந்த மனவேதனையில் உள்ளனர்.

எனவே, மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு, நேபாளத்தில் சிக்கியுள்ள இருவரையும் பத்திரமாக மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Summary

Erode couple on a spiritual tour to Nepal, they are unable to make contact

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.