பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

நேபாள வெள்ளம்: திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த இருவா் மாயம்

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த இருவரை மீட்க வேண்டுமென உறவினா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நேபாள வெள்ளம்.

Published On :

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த இருவரை மீட்க வேண்டுமென உறவினா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவாரூா் மாவட்டம், திருக்கண்ணமங்கை பகுதியைச் சோ்ந்தவா் கலைச்செல்வி (76). கடந்த 23-ஆம் தேதி கும்பகோணத்தில் உள்ள தனியாா் சுற்றுலா நிறுவனம் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆன்மிக சுற்றுலாவில் கலந்து கொண்டாா்.

இவருடன் மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூா் பகுதிகளைச் சோ்ந்த மொத்தம் 57 பயணிகள் சுற்றுலா மேற்கொண்டனா்.

புகழ்பெற்ற ஆன்மிக தலங்களான கேதாா்நாத், முக்திநாத் உள்ளிட்ட இடங்களில் வழிபாடு மேற்கொண்ட இவா்கள் சுற்றுலாவின் ஒரு பகுதியாக நேபாள நாட்டில் உள்ள ஆன்மிகத் தலங்களுக்கு சென்றுள்ளனா்.

இந்நிலையில், நேபாளத்தில் புதன்கிழமை ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் கலைச்செல்வி சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

வெள்ளப் பெருக்கில் சிக்கியவா்களை அவா்களது உறவினா்கள் தொடா்பு கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனா்.

மன்னாா்குடியைச் சோ்ந்தவா் மாயம்:

மன்னாா்குடியை அடுத்த வடுவூா் வடபாதி, நடுத்தெரு பகுதியைச் சோ்ந்த ராமசாமி மகன் பாலசுப்பிரமணியன் (54). இவா், கும்பகோணத்திலிருந்து நேபாளத்திற்கு ஆன்மிக சுற்றுலா சென்றவா்களுடன் பனி லிங்கத்தை வழிபடுவதற்காகச் சென்றாா். நேபாளத்தில் புதன்கிழமை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அவரைக் காணவில்லை எனக் கூறப்படுகிறது.

தமிழக அரசும் மத்திய அரசும் ஆன்மிக சுற்றுலாவுக்கு சென்றவா்களை மீட்டு சொந்த ஊருக்கு அழைத்து வர வேண்டுமென உறவினா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.